உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் குடிநீர் பஞ்சம்: ஜூன் 5ம் தேதி அவசரக் கூட்டத்தைக் கூட்ட யமுனை வாரியத்துக்கு உத்தரவு

டில்லியில் குடிநீர் பஞ்சம்: ஜூன் 5ம் தேதி அவசரக் கூட்டத்தைக் கூட்ட யமுனை வாரியத்துக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அருகில் உள்ள மாநிலங்களின் அவசர கூட்டத்தை ஜூன் 5ம் தேதி கூட்ட யமுனை நதி வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லியில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான வெப்ப அலையால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்காக அல்லாடு கின்றனர். லாரிகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பெரும் போராட்டமே நடக்கிறது. கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, உபரி நீரை திறந்து விட ஹரியானா அரசுக்கு உத்தரவிடக் கோரி, அமைச்சர் ஆதிஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.இந்த வழக்கு, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூன் 03) விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அருகில் உள்ள மாநிலங்களின் அவசர கூட்டத்தை ஜூன் 5ம் தேதி கூட்ட யமுனை நதி வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு மீதான விசாரணை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜூன் 6ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
ஜூன் 03, 2024 21:14

ஏன் தில்லியில் உயர் நீதி மன்றம் செயல்படவில்லையா மாநகரின் ஆட்சி இல்லையா முதல்வர் என்று ஒருவர் இல்லையா மத்திய அரசு என்று ஒன்று இல்லையா எப்படி எதற்கெடுத்தாலும் முந்திரி கோட்டைப்போன்று உச்ச நீதி மன்றம் நேராக எடுத்த எடுப்பிலேயே ஆட்சியில் தலையிட்டு மற்ற அரசுகளுக்கு ஒரு சந்தர்ப்பமே கொடுக்காமல் நேராகவே அவசர சட்டம் இயற்றுகிறது?


kulandai kannan
ஜூன் 03, 2024 18:58

21 நாள் வெளியே இருந்த கேஜிரிவால் என்ன செய்தார்?


GMM
ஜூன் 03, 2024 17:28

மக்களின் மனுவை நேரடியாக நீதிமன்றம் பெறலாம். நிர்வாக மனுவை அப்படி பெற முடியாது. டெல்லி யூனியன் அமைச்சர் உபரி நீர் திறக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது, அதன் மீது நீதிபதிகள் உத்தரவு பிறப்பிப்பது நிர்வாக நடைமுறைக்கு எதிர். உபரி நீர் எப்படி அறிந்தார். அமைச்சர், கவர்னர் மூலம் அருகில் உள்ள மாநில கவர்னர்களை தொடர்பு கொண்டு விவரம் பெற்று தர / உதவி புரிய கோர வேண்டும். உடன்படிக்கை மீறல் இருந்தால் மட்டும் தான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். இல்லாவிட்டால் நட்பு முறையில் பெற வேண்டும். வழக்கறிஞர்கள் நிர்வாக முறையை மதிப்பது இல்லை. நடைமுறையில் உள்ள நீதிபதிகள் தேர்வை மாற்ற வேண்டும். டெல்லியில் எல்லா மாநில மக்கள் இருப்பர். பிற மாநிலம் கட்டாயம் உதவும். வழக்கில் பகை தோன்றும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ