உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியின் தியான திட்டம் : ஊடகங்களில் ஒளிபரப்ப தடை விதிக்க கோரிக்கை

மோடியின் தியான திட்டம் : ஊடகங்களில் ஒளிபரப்ப தடை விதிக்க கோரிக்கை

புதுடில்லி, பிரதமர் மோடியின் தியான திட்டம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது எனக் கூறியுள்ள காங்கிரஸ், இதை ஊடகங்களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தியுள்ளது. அக்கட்சித் தலைவர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா, அபிஷேக் மனு சிங்வி, சையத் நசீர் ஹுசைன் ஆகியோர் அடங்கிய குழு இது தொடர்பான மனுவை தேர்தல் கமிஷனிடம் நேற்று வழங்கியது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட தொகுதிகளில் நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. இன்று மாலை முதலே அங்கு பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் 48 மணி நேர மவுன காலத்தின் போது, பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுகிறார். அவரின் இந்த செயல் நடத்தை விதிகளுக்கு எதிரானது ஆகும். அவரின் தியானம் ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் போது, அது ஒருவகையான பிரசாரமாகவே கருதப்படுகிறது. இது முழுக்க முழுக்க தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்பதால், அவரின் தியான திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த நிகழ்ச்சியை மவுனகாலமாக கருதப்படும் 48 மணிநேரத்துக்கு ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

mayavan
மே 31, 2024 06:37

அப்படியானால் அந்நிய நாட்டில் போய் த்யானம் செயலாமா அஸ்கஸ்தா மாமியார் தொட்டிலும் குற்றம் பட்டாலும் குற்றம் என்பது போல் அல்லவா இருக்கிறது என் அமிட்ஷாவை கண்டு கொள்ளவில்லை


ems
மே 30, 2024 23:02

மோடி தனியா போய் தியானம் செய்ய போகிறார்... இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று கொக்கரிக்கும் கட்சிகள்... ஜூன் 1 அன்று ஒன்று கூட திட்டம் வகுத்தது ஏன்? அப்போ உங்க முகம் தொலைகாட்சியில் வராதா?... அன்று 7வது கட்ட வாக்குப்பதிவு நடக்குமே... இதுவும் தேர்தல் நடத்தை விதிக்கு எதிரானது....


பேசும் தமிழன்
மே 30, 2024 08:32

அப்படி பார்த்தால்.. பிரசாரம் முடிந்த உடன்... தலைவர்கள் அனைவரும் வீட்டில் தான் இருக்க வேண்டும்.. வெளியே வந்து எந்த ஒரு டிவி மற்றும் பத்திரிக்கையிலும் அவர்களின் முகம் வரக்கூடாது.. அதுவும் மறைமுக பிரசாரம் தானே ???


GMM
மே 30, 2024 07:58

தேவையென்றால் ஊடக சுதந்திரம். தேவையில்லாத போது ஊடக கட்டுப்பாடு. புள்ளி கூட்டணி தேர்தல் நடத்தையின் போது, ஒன்று கூடி கூட்டம் கூடிய விவரம் ஊடகத்தில் வரலாம். ஜாமீனில் இருக்கும் கெஜ்ரிவால் பல புதிய பிரச்சார யுக்தியாக மக்களை பயமுறுத்துகிறார். நீங்கள் செய்வது அனைத்தும் நடத்தை விதியின் கீழ். ஊடகத்தை கட்டுப்படுத்தினால், மக்கள் நாட்டு நடப்பை எப்படி அறிய முடியும்?


முருகன்
மே 30, 2024 07:16

தியானம் செய்வது தனிப்பட்ட காரணங்களுக்காக இருப்பின் ஏன் அதனை படம் பிடிக்க வேண்டும்


பேசும் தமிழன்
மே 30, 2024 08:48

உன்னை யார் போய் படம் பிடிக்க சொன்னார்கள் ???


Vijayakumar Srinivasan
மே 30, 2024 05:47

தனி மனித சுதந்திரம் இதுவாக.இருக்கலாம்.ஏன்தடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை