உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மங்களூரில் வீடுகளில் திருட்டு வங்கி லாக்கர்களுக்கு டிமாண்ட்

மங்களூரில் வீடுகளில் திருட்டு வங்கி லாக்கர்களுக்கு டிமாண்ட்

மங்களூரு : மங்களூரில் வீடுகளில் திருடுவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் வங்கி லாக்கர்களுக்கு 'டிமாண்ட்' ஏற்பட்டுஉள்ளது.தட்சிண கன்னடா, மங்களூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருடுவது அதிகரிக்கிறது. வாரத்தில் ஒன்று, இரண்டு திருட்டு வழக்குகள் பதிவாகின்றன. வயதானவர்கள் தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து, திருட்டு நடக்கிறது. அவர்களை தாக்கிவிட்டு கொள்ளையடித்து செல்வதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.திருட்டுக்கு பயந்து, பலரும் தங்கநகைகள், வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைக்க அஞ்சுகின்றனர். வங்கி லாக்கர்களில் வைக்கின்றனர். இதனால், வங்கி லாக்கர்களுக்கு, 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. நடுத்தர, பெரிய லாக்கர்களுக்கு டிமாண்ட் அதிகரித்துஉள்ளது.தனியார் வங்கிகளின் லாக்கர்களுடன் ஒப்பிட்டால், தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் லாக்கர்களின் கட்டணம் குறைவு. எனவே தேசிய, கூட்டுறவு வங்கிகளில் புதிதாக லாக்கர்கள் திறந்து, அதில் நகைகள், வெள்ளி பொருட்களை பாதுகாப்பாக வைக்கின்றனர்.மங்களூரின் எஸ்.சி.டி.சி.சி., வங்கியின் முதன்மை செயல் அதிகாரி கோபால கிருஷ்ணா கூறியதாவது:கடந்த சில நாட்களாக, எங்கள் வங்கியில் புதிதாக லாக்கர் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உண்மைதான். மக்கள் தங்களின் தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் உட்பட விலை உயர்ந்த பொருட்களை வைக்கின்றனர்.தனியாருடன் ஒப்பிட்டால், எங்களின் லாக்கர்களின் கட்டணம் குறைவு. வயதானவர்கள், வேலை பார்க்கும் தம்பதியர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை