மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
5 hour(s) ago | 38
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
7 hour(s) ago | 6
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
10 hour(s) ago | 1
பெங்களூரு:உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் வீட்டுக்குள், முன்னாள் எம்.பி., செல்லகுமார் மற்றும் முன்னாள் எம்.எல்.சி., மோகன் கொண்டஜ்ஜியை, போலீசார் அனுமதிக்காததால் சலசலப்பான சூழ்நிலை உருவானது.காங்கிரசின் முன்னாள் எம்.பி., செல்லகுமார், முன்னாள் எம்.எல்.சி., மோகன் கொண்டஜ்ஜி ஆகிய இருவரும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை சந்தித்துப் பேசுவதற்காக நேற்று காலை பெங்களூரில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தனர்.உள்ளே செல்ல முற்பட்டபோது, அங்கிருந்த பாதுகாப்பு போலீசார், இருவரையும் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர்.'யாரையும் உள்ளே விட வேண்டாமென, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது' என்றனர். செல்லகுமாரும், மோகன் கொண்டஜ்ஜியும் மன்றாடியும் உள்ளே விடவில்லை. இதனால் இவர்களுக்கும், போலீசாருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.சிறிது நேரம் வாசல் அருகில் நின்றிருந்த செல்லகுமார், மோகன் கொண்டஜ்ஜியும், போலீசாரை திட்டியபடி அங்கிருந்து சென்றனர். இவர்களை என்ன காரணத்துக்காக உள்ளே அனுதிக்கவில்லை என, தெரியவில்லை.ஆனால் சிறிது நேரத்துக்கு பின், உள்துறை அமைச்சரின் இல்லத்துக்கு வந்த, பா.ஜ.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜுகவுடாவை போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். போலீசாரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
5 hour(s) ago | 38
7 hour(s) ago | 6
10 hour(s) ago | 1