உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவராஜே கவுடா வஞ்சகர் சிவராமே கவுடா பாய்ச்சல்

தேவராஜே கவுடா வஞ்சகர் சிவராமே கவுடா பாய்ச்சல்

பெங்களூரு : ''ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா பென்டிரைவ் வீடியோவை பரப்பிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பா.ஜ., தலைவரும், வக்கீலுமான தேவராஜே கவுடா மீது, மானநஷ்ட வழக்கு தொடருவேன்,'' என முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:பிரஜ்வல் ரேவண்ணா பென் டிரைவுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேவராஜே கவுடா. என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகிறார். இவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வதுடன், கிரிமினல் வழக்கும் பதிவு செய்வேன்.வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை திசை திருப்ப, வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். இந்த விஷயத்தில் எனக்கும், சிவகுமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. பென் டிரைவை விற்பனை பொருளாக்கியதே, வக்கீல் தேவராஜேகவுடாதான். பென் டிரைவ் வழக்கு, எங்கெங்கோ செல்கிறது. யாரும் தேவராஜே கவுடாவை நம்பாதீர்கள். இவர் ஒரு வஞ்சகர். இவர் முதலில் எனக்கு போன் செய்தார். துணை முதல்வர் சிவகுமாரை சந்திக்க வேண்டும். ஏற்பாடு செய்யும்படி கேட்டார். நானும் ஆகட்டும் என, கூறியிருந்தேன். இதையே முன் வைத்து, தேவராஜேகவுடா பொய்யான தகவலை கூறுகிறார்.தேவராஜே கவுடாவை அழைத்து வாருங்கள் என, சிவகுமார் என்னிடம் கூறவில்லை. பென் டிரைவை பகிரங்கமாக்கியது தேவராஜே கவுடாவும், பிரஜ்வல் கார் டிரைவர் கார்த்திக்கும் தான்.பா.ஜ.,வில் இருந்து விலகியுள்ளேன். மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு, ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளேன். அடுத்து எந்த கட்சியில் இணைவேன் என்பதை விரைவில் கூறுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி