உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் நீர் மின் திட்டம் பார்வையிட்ட தேவகவுடா

காஷ்மீர் நீர் மின் திட்டம் பார்வையிட்ட தேவகவுடா

முன்னாள் பிரதமர் தேவகவுடா, தான் பிரதமராக இருந்த போது, திறந்து வைத்த காஷ்மீரில் உள்ள, உரி நீர் மின் திட்டத்தை, ரயிலில் சென்று பார்வையிட்டார்.ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, தான் பிரதமராக இருந்த போது, 1997 பிப்ரவரி 13ம் தேதி, காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி என்ற இடத்தில், நீர் மின் திட்டத்தை திறந்து வைத்தார்.அதை காண்பதற்காக, 91 வயதாகும் அவர், ஸ்ரீநகரில் இருந்து, பாரமுல்லாவுக்கு, 58 கி.மீ., துாரம் ரயிலில் பயணம் செய்தார். இந்த ரயில் திட்டத்துக்கும் அவர் தான் அனுமதி அளித்தாராம். தான் திறந்து வைத்த போது பொருத்தப்பட்ட பெயர் பலகை முன் நின்று படம் எடுத்து கொண்டார்.பின், அவர் கூறியதாவது:இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். 1996ல் கைவிடப்பட்ட திட்டத்தை, 1997ல் நான் பிரதமர் ஆன பின் புதுக்கப்பிட்டு, துவக்கி வைக்கப்பட்டது.தற்போது, 27 ஆண்டுகளுக்கு பின் பார்வையிட்டேன். இன்று லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறி, அண்டைய மாநிலங்களுக்கும் மின்சாரம் விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கூறினார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை