உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா மாநில காங்., கூண்டோடு கலைப்பு : மல்லிகார்ஜூன கார்கே

ஒடிசா மாநில காங்., கூண்டோடு கலைப்பு : மல்லிகார்ஜூன கார்கே

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் கிடைத்த படுதோல்வியை அடுத்து ஒடிசா மாநில காங்., கட்சியை கூண்டோடு கலைக்கப்பட்டு உள்ளதாக கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களை எந்த ஒரு கட்சியும் தனிப்பட்ட முறையில் பெற முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான பா.ஜ., 240 இடங்களைமட்டுமே பெற்றது. மிகவும் எதிர்பார்த்த உ.பியில் போதுமான இடங்கள் கிடைக்க பெற வில்லை அதே நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஒடிசா மாநிலத்தில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் 20 இடங்களை வென்றது. அதே நேரத்தில் லோக்சபாவில் காங்., தனிப்பட்ட முறையில் 99 இடங்களை மட்டுமே வென்றது. மேலும் ஒடிசா மாநிலத்தில் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.இதனையடுத்து அம்மாநிலத்தில் கிடைத்த மோசமான தோல்வியை அடுத்து மாநில காங்கிரஸ் கட்சியை கூண்டோடு கலைக்கப்பட்டு உள்ளதாக தேசிய தலைவர் மல்லிகார்ஜூன தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மாநிலத்தில் கட்சியின் பல்வேறு பிரிவுகளில் உள்ள தலைவர்கள், செயற்குழு , மாவட்ட அளவில் தொகுதி , மண்டல அளவிலான கட்சி கமிட்டிகள் கலைக்கப்படுகின்றன. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரையில் , தற்போதைய தலைவர்கள் செயல் தலைவர்களாக செயல்படுவார்கள் என தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

saiprakash
ஆக 12, 2024 13:25

சங்கிகள் கதறல்


Bakavathi
ஜூலை 26, 2024 11:51

இருந்தால் தானே கலைப்பதற்கு


பேசும் தமிழன்
ஜூலை 22, 2024 07:47

உண்மையான காந்தியின் கனவை... அது தான் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும்.. அதை போலியாக காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கும் இத்தாலி மாஃபியா கும்பல் செய்து முடிக்குமா ???


கண்ணன்
ஜூலை 22, 2024 06:43

இந்திய நாட்டு இ. காங். கூண்டோடு கலைப்பு- இச் செய்தியினை விரைந்து எதிர் நோக்குகிறேன்


பேசும் தமிழன்
ஜூலை 22, 2024 00:13

அப்படி பார்த்தால் எத்தனையோ தோல்விகளை கான் கிராஸ் கட்சி சந்தித்த போது.....அதற்கு காரணமான இத்தாலி போலி காந்தி குடும்பத்தை .....நீக்கி இருக்க வேண்டுமே ???


பேசும் தமிழன்
ஜூலை 22, 2024 00:13

அப்படி பார்த்தால் எத்தனையோ தோல்விகளை கான் கிராஸ் கட்சி சந்தித்த போது.....அதற்கு காரணமான இத்தாலி போலி காந்தி குடும்பத்தை .....நீக்கி இருக்க வேண்டுமே ???


ஆரூர் ரங்
ஜூலை 21, 2024 22:04

சோனியா காங்கிரஸ் முக்த் ஒடிஷா


ramarajpd
ஜூலை 21, 2024 22:02

தமிழ்நாட்ட எப்ப சார் கலைப்பிங்கா ??


kalyanasundaram
ஜூலை 21, 2024 21:36

So many years Congress was loosing many states, will Kharge dissolve center Congress committe including Sonia and Raghul Gandhi


வாய்மையே வெல்லும்
ஜூலை 21, 2024 21:27

இந்த மாதிரி ஒரு நன்னாள் டில்லி தலைமை கான் க்ராஸ் கட்சியும் இழுத்து மூடும் நாள் பொன் நாள் .. அதை இங்கனம் எதிர்பார்கும் "கடாக்கட்டு காங்கிரஸ் சித்தாந்தத்தை வெறுப்பார்கள் சங்கம் "


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை