உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதி, மதம் குறித்து பிரசாரம் செய்ய வேண்டாம் எச்சரிக்கை!

ஜாதி, மதம் குறித்து பிரசாரம் செய்ய வேண்டாம் எச்சரிக்கை!

' லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் சமூகம், ஜாதி, மதம், மொழி குறித்து பிரசாரம் செய்ய வேண்டாம். நாட்டின் சமூக கலாசார சூழல் நீடித்து நிலைத்திருக்கும் ஒரு பாதுகாப்பு அரண். இது, தேர்தலில் பலியாவதை அனுமதிக்க முடியாது' என, மத்தியில் ஆளும் பா.ஜ., மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு, தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை மறுதினம் ஆறாம் கட்ட தேர்தல் நடக்கிறது.இந்த தேர்தல் பிரசாரத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, பா.ஜ., - காங்., ஆகியவை பரஸ்பரம் தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளன. புகார்கடந்த சில வாரங்களுக்கு முன், ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், 'மத்தியில் காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டு மக்களின் சொத்துக்களை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கி விடும்.'நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா?' என்றார். இதுகுறித்து தேர்தல் கமிஷனில் காங்., புகார் அளித்தது.இதேபோல, காங்., தலைவர்கள் ராகுல், பிரியங்கா போன்றோர், அரசியலமைப்பை பா.ஜ., மாற்ற உள்ளதாகவும், ஜனநாயகத்தை அழிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் பா.ஜ., புகார் அளித்தது.இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் கமிஷன் நேற்று அனுப்பிய கடிதம்:தேர்தல் நேரத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அதே சமயம், எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித கூடுதல் சலுகைகளும் இல்லை. லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் சமூகம், ஜாதி, மதம், மொழி குறித்து பிரசாரம் செய்ய வேண்டாம். நாட்டின் சமூக கலாசார சூழல் நீடித்து நிலைத்திருக்கும் ஒரு பாதுகாப்பு அரண். இது, தேர்தலில் பலியாவதை அனுமதிக்க முடியாது. விமர்சிக்க கூடாதுஇந்திய வாக்காளர்களின் தரமான தேர்தல் அனுபவத்தின் பாரம்பரியத்தை பலவீனப்படுத்த, இரு பெரிய கட்சிகளை அனுமதிக்க முடியாது. உங்கள் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரத்தில் கவனம் செலுத்தி, நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தொடர்ந்து, நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் கமிஷன் தனித்தனியாக கடிதம் அனுப்பியது. நட்டாவுக்கு அனுப்பிய கடிதத்தில், 'பா.ஜ., நட்சத்திர பேச்சாளர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். ஜாதி, மத மற்றும் வகுப்புவாதம் மேலோங்கும் வகையில், அவர்கள் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை