உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., ஆட்சியில் வங்கிகள் சூறையாடப்பட்டன: அனுராக் தாக்கூர் தாக்கு

காங்., ஆட்சியில் வங்கிகள் சூறையாடப்பட்டன: அனுராக் தாக்கூர் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் சூறையாடப்பட்டன என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.சண்டிகர் பா.ஜ., அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனுராக் தாக்கூர் பேசியதாவது: 2014ல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபோது 12 வங்கிகளில் 11 வங்கிகள் நஷ்டத்தில் இருந்தன. மூடப்படும் நிலையில் இருந்த 12 வங்கிகளும் இன்று நிகர லாபத்தில் உள்ளன. எஸ்.பி.ஐ., வங்கியின் லாபம் மட்டும் ரூ.60,000 கோடியை எட்டியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில், அவர்களது நண்பர்களின் நலனுக்காக வங்கிகள் சூறையாடப்பட்டன.

முத்ரா யோஜனா

இன்று ஏழைகள் நலனுக்காக முத்ரா யோஜனா திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ரயில்வே பட்ஜெட்டைப் பார்த்தால், 30 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்ததை விட அதிகமாக நாங்கள் கொடுத்துள்ளோம் என்பது தெரியும். எங்கள் ஆட்சியில் சாலைகள், ரயில்வே, கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய சகாப்தத்தை உருவாக்குவதன் மூலம் ஒரு வளர்ந்த நாடாக மாற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Kanns
ஜூலை 29, 2024 12:35

Now Banks & Economy Collapsing Due to spyAadhar held by all Foreign Infiltrators for Freebies-Concessions, Denied to Natives


முருகன்
ஜூலை 29, 2024 10:47

பழைய கதையை விட்டு விட்டு உங்கள் ஆட்சியில் தனியார் மையம் ஆக்கப்பட்ட விஷயங்களை பேசவும்


Ganesh
ஜூலை 28, 2024 22:33

இப்ப அம்பானி அதானி பேங்க் கொள்ளை அடிக்கிறாங்க, நிதி மந்திரி வரி போடு மக்களை கொள்ளை அடிக்கிறாங்க.


ஆரூர் ரங்
ஜூலை 28, 2024 22:21

லட்சக்கணக்கான கோடி கடன் தள்ளுபடி அளித்திருந்தால் லாபமே கிடைத்திருக்காது. மினிமம் பேலன்ஸ் எல்லா நாடுகளிலும் உண்டு. சும்மா பக்கத்தை நிரப்ப எழுதக்கூடாது. இப்போது பொதுத்துறை வங்கிகளின் சூப்பர் செயல்பாட்டால் அந்தக் பங்குகளின் விலைகள் உச்சத்தில் உள்ளன. வாராக்கடன் விகிதம் பத்தில் ஒரு பங்கு வரை குறைந்துள்ளது.


Narayanan Muthu
ஜூலை 28, 2024 21:44

மக்கள் முட்டாள்கள் எனும் மனோநிலையில் அமைச்சர் உளறுகிறார்.அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் குஜராத் மாபியாக்களுக்கும் வங்கி பணத்தை கொள்ளையடிக்க கூட்டணி போட்டு களவாடும் கும்பலுக்கு இதை பேச எந்த தகுதியும் இல்லை.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 28, 2024 21:42

பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்ற லாரி டிரைவர்களுக்கு 1.5 வருடமாக இன்னும் அவர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய பணம் ராகுல் காந்தி கொடுக்கவில்லை ........


விவசாயி
ஜூலை 28, 2024 21:36

நீ அடிச்சு விடு ராசா இன்னும் 50 வருடம் பிஜேபி ஆட்சி இருந்தாலும் நாம காங்கிரஸ் குறை சொல்லிக்கிட்டே இருப்போம்


Vijay D Ratnam
ஜூலை 28, 2024 20:37

அந்த கொள்ளைக்கூட்டம் வங்கிகளை மட்டுமா சூறையாடியது. ஸ்பெக்ட்ரம் ஊழல், வைமேக்ஸ் ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், டாட்ரா ட்ரக் ஊழல், ஐபிஎல் ஊழல், சத்யம் ஊழல் என்று ஒட்டு மொத்த நாட்டையே சகட்டுமேனிக்கு சூறையாடியது. அதனால்தான் மக்கள் அதை கான்-க்ராஸ் மாஃபியா கூட்டம் என்று அன்போடு அழைக்கிறார்கள்.


Ganesh
ஜூலை 28, 2024 22:35

இப்போது ரபில் கொள்ளை,


Ganesh
ஜூலை 28, 2024 22:36

Ippo adai விட அதிகமான கொள்ளை அடிக்கிறாங்க


S S
ஜூலை 28, 2024 20:03

ஏன் லாபத்தில் இயங்காது. SMS கட்டணம், மினிமம் பேலன்ஸ் குறைந்தால் கட்டணம் என சகட்டு மேனிக்கு வங்கிகள் மக்களிடம் வசூலிக்கின்றன. அதே சமயம் கோடிகணக்கில் கடன் பெறும் பணக்காரர்களுக்கு வட்டி குறைப்பு ,வராக்கடன் என பல சலுகைகள் வழங்குகிறன. பாதிக்கபடுவது நடுத்தர மக்கள்தான்.


Ramesh Sargam
ஜூலை 28, 2024 19:58

வங்கிகள் மட்டுமா சூறையாடப்பட்டன? நாட்டையே சூறையாடினார்கள் இந்த காங்கிரெஸ்காரர்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை