மேலும் செய்திகள்
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர்கள் படுகொலை: ஓவைஸி கண்டனம்
2 hour(s) ago | 2
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
6 hour(s) ago | 40
அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற கர்நாடக மாநில இணைச் செயலர் எஸ்.எம்.பழனி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது:கடந்த 1972ல் அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., ஆரம்பித்தபோது, கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆதரவளித்தனர். கடந்த 53 ஆண்டுகளாக உண்மையாகவும், உறுதி மனப்பான்மையுடனும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சிக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர்.கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்ற வரலாறு உண்டு. அந்த வகையில், கட்சித் தலைமையிடம் எடுத்துச் சொல்லி வெற்றி கண்ட திறமை படைத்த தலைவர்கள் இங்கு இருந்தனர். இன்று அப்படி இல்லை. அத்தகைய திறம் படைத்த மாநிலத் தலைமை இங்கு இல்லாததே காரணம்.எம்.ஜி.ஆர்., காலம் முதல் பழனிசாமி காலம் வரை கர்நாடக மாநில அ.தி.மு.க., பெரும்பாலான நேரங்களில் கட்சித் தலைமைக்கு கை கொடுத்திருக்கிறது.மாநிலத்தில் கட்சியை வளர்த்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பொதுச் செயலர் பழனிசாமி வழியில் மீண்டும் கட்சி தலைதுாக்கி, பீடுநடை போட கட்சித் தலைமை சிந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.எங்களுக்கு நிஜமான கவலையாக இருப்பது, ஓட்டுரிமையை எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது தான். ஜூன் 4ம் தேதிக்கு பின், அ.தி.மு.க., என்ற கட்சியே இருக்காது என சிலர் பேசி வருவது, கர்நாடக அ.தி.மு.க., நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இனி எந்த சூழ்நிலையிலும் இவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்று கடைக்கோடி தொண்டர்களும் நினைக்கக் கூடிய நிலை.தர்மசங்கடமான சூழ்நிலையில், ஒரு கட்சியை வைத்துக் கொண்டு, அதற்கு மக்களிடம் சென்று ஓட்டும் கேட்க முடியாமல், தன் ஓட்டை கூட அதற்கு போட முடியாமல் வேறொரு கட்சிக்கு போடும் நிலை இருக்கிறதே, அது எதிரிக்கும் கூட வரக்கூடாது என்று எண்ணத் தோன்றுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.***- நமது நிருபர் -
2 hour(s) ago | 2
6 hour(s) ago | 40