உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல்: பிரசாரத்தில் ராகுல் பேச்சு

அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல்: பிரசாரத்தில் ராகுல் பேச்சு

போபால்: 'அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., மாற்ற விரும்புகிறது. இது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல்' காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.மத்திய பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: மக்கள் நலனுக்காக தற்போதுள்ள 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை காங்கிரஸ் அரசு உயர்த்தும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் அரசியலின் திசையை மாற்றும். மக்கள் உரிமைக்காக நாங்கள் என்ன செய்தாலும், ஆட்சிக்கு வந்ததும் அதை மாற்றி விடுகிறார்கள். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது ஒரு புரட்சிகரமான வேலை. அது இந்திய அரசியலையே மாற்றும். நாங்கள் அதை செய்வோம்.

150 தொகுதிகள் கூட பா.ஜ.,வுக்கு 'நோ'

அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., மாற்ற விரும்புகிறது. இது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல். நாங்கள் அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம். பா.ஜ.,வுக்கு 150 தொகுதிகளில் கூட வெற்றி கிடைக்காது. பா.ஜ.,வினர் மக்களின் உரிமைகள் அனைத்தையும் பறிக்க விரும்புகிறார். தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்குத் தேவையான இடஒதுக்கீட்டை வழங்குவோம். இவ்வாறு ராகுல் பேசினார்.

ராகுல் கண்டனம்

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்ற செய்தி 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுகளுக்குச் செய்யும் துரோகம். கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களை வினாத்தாள் கசிவிலிருந்து விடுவிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

kulandai kannan
மே 06, 2024 22:13

நேரு குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும் நாள் ஜுன் 4.


தாமரை மலர்கிறது
மே 06, 2024 20:52

காலாவதியான அரசியலமைப்பே தேவை இல்லாத ஆணி


பேசும் தமிழன்
மே 06, 2024 20:27

ஆமாம் அரசியலமைப்பை சீரழிக்க நினைக்கும்.... SC மற்றும் MBC.... போன்றோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறித்து..... முஸ்லீம்களுக்கு கொடுக்க நினைக்கும் உங்களிடம் இருந்து நாட்டை காக்க நடக்கும் தேர்தல்.


A1Suresh
மே 06, 2024 19:38

நூற்றுக்கும் மேற்பட்ட பலகலைகழக துணைவேந்தர்கள் பப்புவிற்கு கண்டனம் எழுதியுள்ளார்களாமே


A1Suresh
மே 06, 2024 17:25

ராகுல் இங்கிலாந்து குடியுரிமையை கேட்டு பெற்றவர் பாரத மக்களுக்கு இந்திய அரசியமைப்பு சட்டப்படி இரட்டை குடியுரிமை இல்லை எனவே இவர் இந்திய அரசியலமைப்பு பற்றி பேச தார்மீக உரிமையை இழந்தவர் அதை பேச எந்த தகுதியும் இல்லை மேலும் சோனியாவிற்கு பிறந்தபடியால் இத்தாலி குடியுரிமையும் வருகிறது


Kumar Kumzi
மே 06, 2024 17:21

நாட்டை காப்பாற்றும் தேர்தல் வேண்டும்


Gokul Krishnan
மே 06, 2024 17:18

தேர்தல் வந்து விட்டால் இவனுக்கு ஏழை எளிய மக்கள் அரசியல் அமைப்பு மீது பாசம் வந்து விடும் ஃபோட்டோ ஷூட் நடத்த வில்லை எதிர் கட்சி ஆக இருக்கும் போது எதற்கு சீன அரசுடன் ஒப்பந்தம் அதை பற்றி வாய் திறக்க மாட்டார்


குமரி குருவி
மே 06, 2024 17:14

நாம் மனம் போல் வாழ அரசியல் அமைப்பை மாற்ற ஆசையா...? விளங்கிடும்


Venkat, UAE
மே 06, 2024 16:46

இந்த மாதிரி நிறைய பேரு உருட்டிக்கிட்டு போய்ட்டாங்க புதுசா ஏதாவது உருட்டுங்க


M S RAGHUNATHAN
மே 06, 2024 16:27

அரசியல் அமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீடு பட்டியல் இன மக்களுக்கு மட்டும் தான் அம்பேத்கர் அவர்களால் கொடுக்கப் பட்டது அதுவும் கால வரையறையுடன் கொடுக்கப் பட்டது அதை நிறுத்தியது யார் ? அரசமைப்பு சட்டத்தில் மத சார்பற்ற மற்றும் சோசலிசம் வார்த்தைகளை சேர்த்து மாற்றியது யார் ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை