உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர்களின் விபரங்கள் தேர்தல் கமிஷன் தடை

வாக்காளர்களின் விபரங்கள் தேர்தல் கமிஷன் தடை

புதுடில்லி, தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை: சில அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சர்வே என்ற போர்வையில், தேர்தலுக்கு பிந்தைய திட்டங்களுக்காக வாக்காளர்களின் விபரங்களை பதிவு செய்வதை கவனித்துள்ளோம்.நலத்திட்டங்களுக்காக வாக்காளர்களின் விபரங்களை கோரும் விளம்பரங்கள், சர்வேக்கள், மொபைல் செயலிகள் போன்ற நடவடிக்கைகளை அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளும் உடனடியாக நிறுத்த வேண்டும். தேர்தலுக்குப் பிந்தைய பலன்களுக்காக வாக்காளர்களிடம் தங்களின் விபரங்களை பதிவு செய்ய அழைப்பு விடுப்பது, பலன் கருதி வாக்காளர் - வேட்பாளர் இடையே உறவை ஏற்படுத்துவது போன்ற தோற்றத்தை உண்டாக்கலாம்.மேலும், இது ஓட்டு போடுவதற்காக குறிப்பிட்ட வழியில் பலனை ஏற்படுத்தி தரும் வழியை கொண்டுஉள்ளது. இதன் காரணமாக இத்திட்டம் வாக்காளர்களை குறிப்பிட்ட வேட்பாளருக்கு சாதகமாக ஓட்டு போட தூண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ