உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில், 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மூன்று பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர்.சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k9y770m2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நக்சலைட்டுகள் இடம் இருந்து ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு என்கவுன்டரில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

A1Suresh
ஜூன் 08, 2024 12:58

இதென்ன காங்கிரஸ் அரசா ?


Lion Drsekar
ஜூன் 08, 2024 11:46

பாராட்டுக்கள அதே நேரத்தில் சரணடைவோருக்கு வேலையும் கொடுக்கும் நம் ஜனநாயகம் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களே இதற்க்கு சாட்சி . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை