உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் என்கவுன்டர்; 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; ராணுவ வீரர் வீரமரணம்

காஷ்மீரில் என்கவுன்டர்; 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; ராணுவ வீரர் வீரமரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர், குல்காம் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார்ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது. குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது ராணுவ வீரர் ஒருவர் பலத்த காயமுற்றார். பின்னர் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.n.balasubramani
ஜூலை 06, 2024 22:07

வீரா உங்கள் ஆத்துமா இறைவன் மடியில் உறங்கட்டும் உங்கள் வாரிசு கண்டிப்பாக வளம் பெரும் இறைவனை வேண்டுகிறோம். நாளை காலை எனது பூஜை பிரார்த்தனை உங்களுக்கு


P. VENKATESH RAJA
ஜூலை 06, 2024 18:07

பாதுகாப்பு படை வீரர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறேன்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை