உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கள்ள காதல் விபரீதம் இருவர் தற்கொலை

கள்ள காதல் விபரீதம் இருவர் தற்கொலை

பாலக்காடு:பாலக்காடு அருகே, கள்ளக்காதல் விபரீதத்தால் இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் கடம்பழிப்புரம் அழியன்னூர் பகுதியை சேர்ந்தவர் குஞ்சிலட்சுமி, 38. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இவரது வீட்டிற்கு அருகே வசிப்பவர் தீபேஷ், 38. இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று இருவரும் வீட்டின் அருகிலுள்ள வயல் அருகே இருந்த ஷெட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.இருவரும் இறந்து கிடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், கோங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சடலத்தை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பினர்.கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்து விட்டதாலும், சேர்ந்து வாழ முடியாததாலும், இருவரும் தற்கொலை செய்து கொண்டது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ