உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடஒதுக்கீடு தொடர்பாக அமித்ஷாவை வைத்து போலி வீடியோ: தெலுங்கானா முதல்வருக்கு சம்மன்

இடஒதுக்கீடு தொடர்பாக அமித்ஷாவை வைத்து போலி வீடியோ: தெலுங்கானா முதல்வருக்கு சம்மன்

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பேசியது போன்று போலி வீடியோவை சமூகவலைதளங்களில் பரவிய விவகாரம் தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மே 1ல் ஆஜராகுமாறு டில்லி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த 4 பேருக்கு நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.தேர்தல் பிரசாரத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக அமித்ஷா பேசிய வீடியோவை திரித்து, பட்டியல் சாதியினர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பேசுவது போன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1a158nj9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், தவறான தகவல்களை குறிப்பிட்டு பரப்பப்பட்ட இந்த வீடியோவை, உருவாக்கி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய உள் துறை அமைச்சகம் சார்பிலும் நடவடிக்கை கோரி, புகார் அளிக்கப்பட்டுள்ளது. டில்லி போலீசார், அமித்ஷாவின் அசல் வீடியோவையும், சித்தரிக்கப்பட்ட வீடியோவையும் ஒப்பிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மே 1ல் ஆஜராகுமாறு டில்லி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த 4 பேருக்கு நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஒருவர் கைது

அமித்ஷா பேசியதுபோல் போலியாக வீடியோ பரப்பிய விவகாரத்தில் அசாமை சேர்ந்த ரிதோம் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அஞ்சமாட்டோம்

இது குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது: சி.பி.ஐ., அமலாக்கத்துறை போல் டில்லி போலீசார் மூலம் பிரதமர் மோடி, அமித் ஷா அச்சுறுத்துகின்றனர். மத்திய அரசின் நடவடிக்கைக்கு அஞ்சமாட்டோம், போராடுவோம் எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Srinivasan Krishnamoorthi
ஏப் 29, 2024 15:21

FIR நிலையிலேயே முடித்து விடுவார்களோ


GMM
ஏப் 29, 2024 13:21

தற்போதைய வாக்கு முறையில் எந்த கட்சியும் இட ஒதுக்கீடு ரத்து செய்யாது காங்கிரஸ் சாதி வாரி கணக்கெடுப்பு - இந்து ஒற்றுமையை சீர்குலைக்க தான் அரசியல் சாசனத்தில் இல்லாத மத இட ஒதுக்கீடு மூலம் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் பெற்று வருகிறது பரம்பரை சொத்து பகிர்வு என்று சமூக குழப்பம் ஏற்படுத்துகிறது பிறர் வீடியோ வெளியிட முன் அனுமதி தேவை அரசியலில் தாக்கம் ஏற்பட்டால், தேர்தல் முடிவு நிறுத்தி, விஷம கட்சி தடை செய்ய வேண்டும் சட்டம் ஒழுங்கு நிலைக்க நீதிமன்ற முடிவு அவசியம் போலீசில் புகார் அதிகம் பயன் தராது


vijay
ஏப் 29, 2024 11:51

காங்கிரஸ் ஒரு வெட்கங்கெட்ட மானங்கெட்ட கட்சி பொய்களை பரப்புவதில் திராவிட கட்சிக்கு போட்டி போடக்கூடிய பெரும் கட்சி காங்கிரஸ், துடைப்ப கட்சி இவற்றை தடை செய்துவிட வேண்டும் மக்களாவது இவங்களை ஓரம்கட்டி லாடம் கட்டவேண்டும்


Sampath Kumar
ஏப் 29, 2024 11:24

பிள்ளையையும் கிள்ளுவங்கள்லாம் தொட்டிலையும் ஆடுவாங்கலாம்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ