| ADDED : மார் 23, 2024 06:59 AM
ஹாவேரி: விவசாயி தீயில் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.ஹாவேரியின் கரஜகி கிராமத்தில் வசித்தவர் விவசாயி பரமண்ணா வீரப்பா டொங்கன்னவரா, 65. இவர் பயிரிடவும், டிராக்டர் வாங்கவும் பல இடங்களில் 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். எதிர்பார்த்தபடி விளைச்சல் கிடைக்கவில்லை. கடனை எப்படி அடைப்பது என, கவலையில் ஆழ்ந்தார்.இது தொடர்பாக, நேற்று முன்தினம் காலை, மனைவியுடன் பேசி வருந்திய விவசாயி, வயலுக்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பீதியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.அப்போது நிலத்தின் பக்கத்தில் உள்ள நீலகிரி தோப்பில் தீப்பிடித்திருப்பது தெரிந்தது. அங்கு சென்று பார்த்த போது, பரமண்ணா தீயில் குதித்து, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஹாவேரி போலீசார் விசாரிக்கின்றனர்.