உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவரோட ஒண்ணா உக்காந்தா குமட்டிகிட்டு வருது! அஜித் பவாரை வார்த்தைகளில் வெளுத்தார் கூட்டணிக்கட்சி பிரமுகர்

அவரோட ஒண்ணா உக்காந்தா குமட்டிகிட்டு வருது! அஜித் பவாரை வார்த்தைகளில் வெளுத்தார் கூட்டணிக்கட்சி பிரமுகர்

மும்பை; அஜித் பவாருடன் உட்காரும் போது குமட்டல் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதாக ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா தரப்பு பிரமுகர் கூறி இருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

2 அணிகள்

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்து உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் உள்ளது. இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்து சரத்பவார் தலைமையிலும், அஜித்பவார் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.

கிண்டல்

இவ்விரு கட்சிகளின் இரு பிரிவுகளிலும் அவ்வப்போது மோதல் போக்கு ஏற்பட்டு அரசியல் களத்தை பரபரக்க வைக்கும். அப்படி ஒரு சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே தரப்பு பிரமுகர் தனாஜி சாவந்த். அவர் அஜித்பவாரை கிண்டலடித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான நெருக்கம் தமக்கு குமட்டல் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளதாக பேசியிருப்பது தான் சர்ச்சைக்கு காரணம்.

குமட்டல்

நிகழ்ச்சி ஒன்றில் தனாஜி சாவந்த் கூறி உள்ளதாவது; நான் ஒரு சிவசேனா பிரமுகர். என்னை போன்றவர்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான உறவையே ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பது உண்மை. எங்களுக்கு குமட்டுவது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

கொள்கை

அவர்களின் (காங்., தேசியவாத காங்.,) கொள்கை என்பது வேறு, எங்களின் கொள்கை என்பது வேறு. அஜித் பவாருடன் ஒன்றாக உட்காரும் போது குமட்டல் வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதனால் சிறிதுநேரத்திலேயே நான் அங்கிருந்து வெளியேறி சென்று விடுவேன். என்னால் எதையே ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

60 வயது

கொள்கைகளுக்காகவே இருப்பதால் 60 வயது ஆன பின்னரும், சில விஷயங்களை மாற்றிக் கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மனம் மறுக்கிறது. இவ்வாறு தனாஜி சாவந்த் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை