மேலும் செய்திகள்
மாநகராட்சி குப்பை குடோனில் தீ விபத்து
21-Nov-2024
புதுடில்லி:வடகிழக்கு டில்லி நியூ உஸ்மான்பூரில் இரண்டடுக்கு மாடி வீட்டில், நேற்று மதியம் 12:50 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து, 5 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சென்றனர். மதியம் 2:00 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.அந்த வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில், இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த அனைவரும் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.ஆனால், ஏராளமான பொருட்கள், நகைகள் எரிந்தன. சமையல் அறையில் காஸ் சிலிண்டர் வெடித்ததால் தீப்பற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Nov-2024