உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதி பற்றாக்குறை ஜி.டி.பி.,யில் 4.9 சதவீதம்

நிதி பற்றாக்குறை ஜி.டி.பி.,யில் 4.9 சதவீதம்

புதுடில்லி, நடப்பு நிதியாண்டு 2024 - 25க்கான நிதிப் பற்றாக்குறை ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.பட்ஜெட் தாக்கலின் போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:வரும், 2025ம் நிதியாண்டில் மொத்த மற்றும் நிகர சந்தை கடன் முறையே 14.01 லட்சம் கோடி மற்றும் 11.63 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே ஆண்டுக்கான நிகர வரி வசூல் 25.83 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த வரவு 32.07 லட்சம் கோடி ரூபாய். மொத்த செலவு 48.21 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டு 2024 - 25க்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதை, 2025 - 26ல் 4.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்