| ADDED : ஜூலை 20, 2024 02:35 AM
மும்பை : டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு 225 பயணியர், 19 விமான ஊழியர்கள் என மொத்தம் 244 பேருடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் 'ஏஐ183' என்ற விமானம் புறப்பட்டது. சில மணி நேரங்களில் எதிர்பாராதவிதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.இதையறிந்த விமானி, உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அப்போது, ரஷ்ய வான் பரப்பின் மீது அந்த விமானம் பறந்ததால், அருகே உள்ள அந்நாட்டின் ரஷ்னொயர்ஸ் நகரின் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இதுகுறித்து சமூக வலைதளத்தில், ஏர் இந்தியா நிறுவனம் கூறுகையில், 'பயணியர் உட்பட அனைவரும் நலமுடன் உள்ளனர்; விமானம் தரையிறங்கியபோது, ரஷ்யாவில் நள்ளிரவு நேரம் என்பதால் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. 'அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு மாற்று விமானம் வாயிலாக பயணியர் அனைவரும் பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்படுவர்' என, பதிவிட்டுஉள்ளது.