உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புனே, நாசிக்கில் வெள்ளம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புனே, நாசிக்கில் வெள்ளம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை, மஹாராஷ்டிராவில் புனே, நாசிக் உள்ளிட்ட நகரங்களில் பெய்த பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் புனே, நாசிக் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.இதனால், இந்த நகரங்களின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாசிக்கில் கடந்த 48 மணி நேரத்தில் 25 செ.மீ., மழை பெய்தது. கங்காப்பூர் அணை நிரம்பியதால், நேற்று அதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 29 வயது இளைஞர் அடித்து செல்லப்பட்டார். கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புனேயின் ஏக்தா நகரில் ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சந்தித்து, நிவாரண உதவிகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை