உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் முதல்வர் மகள் திடீர் மரணம்

முன்னாள் முதல்வர் மகள் திடீர் மரணம்

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லின் மகள் ஹம்சா மொய்லி, உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார்.கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லின் மூன்றாவது மகள் ஹம்சா மொய்லி, 46. பிரபல பரதநாட்டிய கலைஞர். அதுமட்டுமின்றி, தமிழில், தேவதாசிகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட, சிருங்காரம் என்ற படத்திலும் நடித்ததன் மூலம், நடிகையாகவும் அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.பரத நாட்டிய கலைஞரான ஹம்சா மொய்லி, உள்நாடு உட்பட வெளிநாடுகளிலும் பல கலாசார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். ஏற்கனவே, உடல் நலக்குறைவால் பெங்களூரு வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்த ஹம்சா மொய்லிக்கு, திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால், உடல் நலம் பாதிக்கப்பட்டது.உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. கட்சி பணியாக சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றிருந்த வீரப்ப மொய்லிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக பெங்களூரு திரும்பினார்.இன்று காலை, ஹம்சா மொய்லியின் இறுதி சடங்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை