உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் எம்.எல்.ஏ., சஸ்பெண்ட் ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை

முன்னாள் எம்.எல்.ஏ., சஸ்பெண்ட் ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை

புதுடில்லி:முன்னாள் எம்.எல்.ஏ., நிதின் தியாகி, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.புதுடில்லி லட்சுமி நகர் சட்டசபை தொகுதியில் 2015 - 2020 வரை ஆம் அத்மி எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தவர் நிதின் தியாகி, 50.லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தியாகி மீது புகார்கள் குவிந்தன.விசாரணை நடத்திய பின், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நிதின் தியாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து, டில்லி மாநில ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச் சூழல் துறை அமைச்சருமான கோபால் ராய் வெளியிட்டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, கட்சிக்கு விரோதமாக நிதின் தியாகி செயல்பட்டுள்ளார். கட்சியின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தி, தியாகியின் கட்சி விரோத நடவடிக்கையை உறுதிப்படுத்தியது. இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நிதின் தியாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கட்சி நடவடிக்கை குறித்துப் பேசிய நிதின் தியாகி, “உண்மையைப் பேசியதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்