உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலை விபத்தில் நால்வர் பலி

சாலை விபத்தில் நால்வர் பலி

சித்ரதுர்கா: பெங்களூரின், தனிசந்திராவை சேர்ந்த குடும்பத்தினர், நேற்று முன் தினம் இரவு, காரில் கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்டனர். நேற்று அதிகாலை, சித்ரதுர்காவின், சிக்கபென்னுாரின், தேசிய நெடுஞ்சாலை - 48ல், சென்றபோது முன்னே சென்ற லாரியின் டயர் வெடித்ததில், குறுக்கும், நெடுக்குமாக ஓடியது.அப்போது பின்னால் வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. அதில் பயணம் செய்த பிரஜ்வல் ரெட்டி, 30, இவரது மனைவி ஹர்ஷிதா, 28, இவர்களின் இரண்டு வயது ஆண் குழந்தை ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.காயமடைந்த நால்வர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய்ரெட்டி உயிரிழந்தார். பசவசாகரா போலீசார் விசாரிக்கின்றனர்.சுற்றுலா சென்றபோது நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தின் நால்வர் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ