உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புதுடில்லி: 6-12 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்வழங்க அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று(ஜூன்-08) விசாரணைக்கு வர உள்ளது.பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு மாதவிடாய் சுகாதார பொருட்களை விநியோகம் செய்வது குறித்து பொது நல வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்குவதற்கான தேசிய கொள்கை வரைவு உருவாக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பதில் அளித்தது. இதனிடையே இந்த வழக்கு விசாரணை நாளை (8 -ம் தேதி )நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை