மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
தங்கவயல்: ''கர்நாடக மாநிலத்தில், புத்த மதத்துக்கு தங்கவயல் தான் நுழைவாயில்,'' என, அசோகா தம்ம துாத புத்த சங்க புரவலர் டாக்டர் பூர்ணேஷ் தெரிவித்தார்.தங்கவயலில் உள்ள மகாபோதி சங்கத்தின் சார்பில், அசோகா தம்ம துாத புத்தர் கோவிலில் நேற்று புத்த ஜெயந்தி விழா நடந்தது. இதில், சங்க புரவலர் டாக்டர் பூர்ணேஷ் ராஜு பேசியதாவது:கர்நாடக மாநிலத்தில் புத்த மதத்தின் நுழைவாயில் தங்கவயல் ஆகும். இங்கு 1907ம் ஆண்டில் மாரி குப்பத்தில் தென்னிந்திய பவுத்த சங்கமும், 1911ல் சாம்பியன் ரீப் பகுதியில் புத்த சங்கமும் உருவானது. இந்த இரு சங்கமும் தங்கச் சுரங்க தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தான் ஏற்படுத்தப்பட்டது.பண்டிதர் அயோத்திதாசர், பண்டிதமணி அப்பாதுரையார் ஆகியோர் தங்கவயலில் புத்த சங்கத்தை தோற்றுவித்து பரப்பினர். தங்கவயலில் சுரங்கத் தொழிலுக்கு அடிமைகளாக தமிழர்கள் குடியேறினர். இவர்களை நல்வழி பாதையில் கொண்டு செல்ல, புத்தமே அறநெறி பாதை என்று தெரிவித்தனர்.புத்தர் தான் தியானத்தின் தந்தை. அவர் கடைப்பிடிக்க செய்த தியானமே ஞானத்தின் அடிச்சுவடு. தியானம் மன அமைதியை, பொறுமையை தரும். உயிர்களை நேசிக்க செய்யும். மனிதர்களுக்குள் அன்பை வளர்க்கும். எதிரிகளையும் மனம் திருந்த வைக்கும். அம்பேத்கர் கூட தங்கவயல் புத்த சங்கத்துக்கு வந்தார். அவரும் புத்த மதத்தை தழுவினார். இதில் தான் மன நிறைவு கிடைக்கிறது என்றார்.இவ்வாறு அவர் பேசினார்.தங்கச் சுரங்க தலைமை அதிகாரி நன்மதிசெல்வன் பேசியதாவது:நான் பல மாநிலங்களில், பல நகரங்களில் அரசு அதிகாரியாக பணியாற்றி இருந்தாலும், தங்கவயலுக்கு வந்து எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இங்குள்ள தமிழர் பண்பாடு, கலாசாரம் என்னை பெரிதும் ஈர்த்துள்ளது. மதங்கள் உருவாவது தவறில்லை. மதங்களுக்கெல்லாம் புத்த மதமே வேராக உள்ளது. மன அமைதிக்கு சலனமில்லா வாழ்வுக்கு அடித்தளமாக உள்ளது. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களாக சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவை உள்ளன.இதில் இரு பெரும் காப்பியங்கள் புத்த மதத்தை தழுவியது. அதேபோல இரண்டு காப்பியங்கள் ஜைன மதத்தை சார்ந்தது. தமிழர்களுக்கு புத்த மதம் புதியதல்ல. புத்த மதம் மிக பழமையான மதமாகும். மனிதர்களை புனிதப்படுத்தும் அறம் கொண்டது புத்த மதம்.இவ்வாறு அவர் பேசினார்.
3 hour(s) ago | 9
6 hour(s) ago
7 hour(s) ago