கன்னடத்தில் பேசி ஜெர்மனி பெண் அசத்தல்
மைசூரு : கன்னடத்தில் பேசி அசத்திய, ஜெர்மனி பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது.ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் மொபைல் போனில் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவில் பேசிய அவர், சில ஆண்டுகளாக கர்நாடகாவில் வசிக்கிறேன். கன்னடம் பேச ஓரளவு கற்று உள்ளேன். இன்று முழுதும் கன்னடத்தில் பேச உள்ளேன். ஹிந்தி, ஆங்கிலத்தில் பேச மாட்டேன் என்று கூறினார்.பின், அவர் பேசுகையில், ''நானு இவாகா தேவராஜா மார்கெட் அல்லி இதினி. நானு கன்னடா சென்னாகி மாத்தாடிதரே நனகே தம்ஸ் அப் கொடி,'' என்று கூறுகிறார். அதன்பின் சிலரிடம் கன்னடத்தில் பேசுகிறார்.இந்த வீடியோவை கிருஷ்ணா என்பவர், 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். வீடியோ பார்க்கும் கன்னடர்கள், கன்னடத்தில் பேசிய ஜெர்மனி பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.