உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு மருத்துவமனையில் மின் வெட்டால் பாதிப்பு

அரசு மருத்துவமனையில் மின் வெட்டால் பாதிப்பு

மைசூரு: ஹுன்சூரின் அரசு பொது மருத்துவமனையில் பல நாட்களாக, மின் வெட்டு பிரச்னை உள்ளது. இதனால் நோயாளிகள் பாதிப்படைந்து உள்ளனர். மைசூரு ஹுன்சூரின் தேவராஜ் அர்ஸ் பொது மருத்துவமனை உள்ளது. சுற்றுப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். குறிப்பாக ஏழைகள், மருத்துவ சிகிச்சைக்கு இதே மருத்துவமனையை நம்பி உள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சில நாட்களாக, மின் வெட்டு பிரச்னை உள்ளது.ஜெனரல் வார்டு, உள் நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஐ.சி.யு., வார்டிலும் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது. ஐ.சி.யு.,வில் சிகிச்சை பெறும் நோயாளிகள், டயாலிசிஸ் செய்து கொள்ள வரும் நோயாளிகள், எப்போது மின்சாரம் போகுமோ என்ற அச்சத்திலேயே, சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மருத்துவமனையில் மின் தடை பிரச்னை இருப்பது தெரிந்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, நோயாளிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ