மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago
ராஜ்நிவாஸ்:டில்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பா.ஜ., எம்.பி.,க்களுக்கு துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா நேற்று ராஜ் நிவாஸில் மதிய விருந்து அளித்தார்.டில்லியின் லோக்சபா தொகுதிகளுக்கு மே 25ம் தேதி ஒரேகட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் பா.ஜ., தனித்துப் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி களமிறங்கியது.எனினும் ஏழு லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்று, டில்லியை தக்கவைத்துக் கொண்டது. தொடர்ந்து மூன்றாவது முறையாக, டில்லியை பா.ஜ., முழுமையாக கைப்பற்றியுள்ளது.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வடகிழக்கு டில்லி எம்.பி., மனோஜ் திவாரி, புதுடில்லி எம்.பி., பன்சூரி ஸ்வராஜ், தெற்கு டில்லி எம்.பி., ராம்வீர் சிங் பிதுரி, மேற்கு டில்லி எம்.பி., கமல்ஜீத் செராவத், கிழக்கு டில்லி எம்.பி., ஹர்ஷ் மல்ஹோத்ரா, வடமேற்கு டில்லி எம்.பி., யோகேந்திர சந்தோலியா, சாந்தினி சவுக் எம்.பி., பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் நேற்று ராஜ் நிவாஸில் துணைநிலை கவர்னர் வி.கே., சக்சேனாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.அப்போது பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு துணைநிலை கவர்னர் மதிய உணவு விருந்தளித்தாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.'டில்லியில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா உறுப்பினர்கள் இன்று (நேற்று) துணைநிலை கவர்னரை சந்தித்தனர்' என, ராஜ் நிவாஸ் அதிகாரிகள் மாளிகையின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். துணைநிலை கவர்னருடன் பா.ஜ., - எம்.பி.,க்கள் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
6 hour(s) ago | 2
11 hour(s) ago