உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கபாப்களில் செயற்கை நிறமூட்டி பயன்படுத்த அரசு தடை

கபாப்களில் செயற்கை நிறமூட்டி பயன்படுத்த அரசு தடை

பெங்களூரு, : உணவு வகைகளான மீன் வறுவல், சிக்கனில் செயற்கை நிறமூட்டி பயன்படுத்த கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.உணவு வகைகளான கோபி மன்சூரியன், பஞ்சு மிட்டாயில் செயற்கை நிறமூட்டி பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்துக்கு, பாதிப்பு ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்தது. எனவே அவற்றில் செயற்கை நிறமூட்டி பயன்படுத்த, சுகாதாரத்துறை தடை விதித்தது.

ஆய்வு செய்து அறிக்கை

அதேபோன்று சிக்கன், மீன் வறுவலில் செயற்கை நிறமூட்டி பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, சுகாதாரத்துறை அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், உணவு பாதுகாப்பு துறை கமிஷனருக்கு உத்தரவிட்டார்.தரமற்ற உணவை சாப்பிடுவதால், மக்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கிறது. இவர்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அமைச்சரின் உத்தரவுபடி, மாநிலம் முழுதும் விற்கப்படும் கபாப்களின் மாதிரியை பரிசோதனை செய்தனர். மீன் வறுவல், சிக்கன் கபாபில் செயற்கை நிறமூட்டி பயன்படுத்துவதால், மக்களின் உடல் ஆரோக்கியம் பாதிப்பது தெரிந்தது. எனவே கபாப்களில், செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்த தடைவிதித்து, சுகாதாரத்துறை நேற்று உத்தரவிட்டது.அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:கர்நாடகா முழுதும், 39 கபாப் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இவற்றில் எட்டு கபாப் மாதிரிகளில், செயற்கை நிறமூட்டி பயன்படுத்தியது தெரிந்தது. இது பாதுகாப்பு அற்றது. உணவு பொருட்களில் இது போன்ற நிறமூட்டிகளை பயன்படுத்த கூடாது.

ஆரோக்கியம் பாதிப்பு

வெஜ் கபாப், சிக்கன், பிஷ் கபாப் தயாரிக்கும்போது, செயற்கை நிறமூட்டி பயன்படுத்தப்படுகிறது. இது ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதியானது. இத்தகைய நிறங்கள் மக்களின் ஆரோக்கியத்தில், பக்கவிளைவை ஏற்படுத்துகிறது.இந்த உத்தரவை மீறினால், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்