உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேரலாம் : தடையை நீக்கியது மத்திய அரசு

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேரலாம் : தடையை நீக்கியது மத்திய அரசு

புதுடில்லி: அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த 1960 களில் இந்திரா பிரதமராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. முன்னதாக 1948 ல் தேசதந்தை மகாத்மா காந்தி படுகொலைக்கு பின் அந்த அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை வித்தார்.இந்நிலையில் 3 வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி தலைமையிலான பா.ஜ., அரசு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இனி அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரலாம் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 58 ஆண்டுகால தடை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தடையை நீக்கியதற்கு காங்.,.உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழ்வேள்
ஜூலை 23, 2024 11:04

முஸ்லீம் லீக், கிறிஸ்தவ முன்னணிகளில் சேர தடையில்லை என்னும்போது, ஹிந்து அமைப்புகளுக்கு மட்டும் ஏன் தடை? அதாவது, பாரதம் கிறிஸ்தவ இஸ்லாமிய மயமாக்கப்படவேண்டும் என்ற அவாவை காங்கிரஸ் கொண்டுள்ளது என்பதையே இந்த 58 ஆண்டுகால தடை காட்டுகிறது .


venugopal s
ஜூலை 23, 2024 08:07

அடுத்த பாராளுமன்ற தேர்தல் வருவதற்குள் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் மட்டுமே மத்திய அரசின் பதவிகளில் நியமனம் செய்யப் படுவார்கள் என்று வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மத்திய பாஜக அரசு பேசாமல் யு பி எஸ் சி, எஸ் எஸ் சி எல்லாவற்றையும் கலைத்து விட்டு ஆர் எஸ் எஸ் மூலமாக மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை நியமனம் செய்வார்கள்.


பேசும் தமிழன்
ஜூலை 23, 2024 09:23

அரசு ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சியிலும்.. அமைப்புகளிலும் சேர கூடாது என்று சட்டம் கொண்டு வரலாம்.. ஆனால் இங்கே அனைத்து கட்சிகளின் சார்பாகவும் தொழிற்சங்கம் என்ற பெயரில் கட்சியில் இருக்கிறார்கள். குறிப்பாக திமுக மற்றும் கம்யூனிஸ்ட்கள் கட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.


D PS
ஜூலை 23, 2024 04:58

அனைவரும் வாருங்கள் பிஜேபிக்கி


Priya
ஜூலை 23, 2024 04:44

அருமை நன்றி மோடி ஜீ அவர்களே


M Ramachandran
ஜூலை 23, 2024 02:51

இந்திராவின் காங்கரஸ் அரசால் விதிக்க பட்டா தடை மோடியால் நீக்கம்.


மேலும் செய்திகள்