உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

புதுடில்லி: புற்றுநோய் சிகிச்சைக்கான செலவை மேலும் குறைக்கும் வகையில், புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 5% குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.54-வது ஜி.எஸ்.டி.,கவுன்சில் கூட்டம் இன்று டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்றது.இதில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கோவா, மேகாலயா மாநில முதல்வர்கள், அருணாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநில துணை முதலமைச்சர், பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியது,* ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் வருவாய் 6 மாதங்களில் அதிகரித்து ரூ.6909 கோடியாக உள்ளது* மத்திய அரசின் சட்ட விதிகளின் படி நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள், மாநில அரசுகளின் சட்ட விதிகளின் படி நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அரசு மற்றும் தனியாரிடமிருந்து, வரி விலக்கு பெற்றவர்களிடம் இருந்து ஆராய்ச்சி நிதியைப் பெறலாம் அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.* ஐஜிஎஸ்டியில் எதிர்மறையான சமநிலை இருப்பதால் இது தொடர்பாக, இறுதி முடிவை எடுக்க வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் தலைமையில்,மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும்* புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான செலவை மேலும் குறைக்கும் வகையில் இது 12%லிருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. * வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவும், அதற்கான வட்டியை செலுத்தவும் நீட்டிக்கப்பட்ட இழப்பீடு செஸ் வசூலிக்கப்படுகிறது. அநேகமாக ஜனவரி 2026 ஆண்டுக்குள் கடன் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்துவோம்.எனவே மார்ச் வரை இழப்பீடு செஸ் வரி நடைமுறையில் இருக்கும். ஆனால் இழப்பீட்டு செஸ் மார்ச் 2026 க்குள் முடிவடைகிறது. * செஸ் வசூல் மார்ச் 2025 வரை 8,66,706 கோடி ரூபாயாக இருக்கும். செப்டம்பர் 5ஆம் தேதி 2024 வரை வழங்கப்பட்ட இழப்பீடு மைனஸ் 6,64,203 ஆகும். திருப்பிச் செலுத்த வேண்டிய கடனானது மைனஸ் 2,69,208 ஆகவும் உள்ளது.* மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு 18 சதவீத வரியை குறைப்பது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. அதேநேரத்தில் எவ்வளவு மற்றும் அதற்கான நடைமுறைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இதற்காக 2 புதிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. * நம்கீன் எனப்படும் பிராண்டட் நொறுக்கித் தீனிகள் மீதான ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்திலிருந்து 12% ஆகக் குறைக்கப்படுகிறது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M.Srinivasan
செப் 13, 2024 08:40

மருந்துகள் அத்தியாவசிய பொருட்கள் சிறு உணவகங்கள் மீதான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட வேண்டும். மக்களை வருத்தி கசக்கி பிழிந்து வரி வசூலித்து என்ன செய்யப் போகின்றீர்கள். விவசாயத்திற்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும்.ஜிஎஸ்டி எவ்விதம் செலவிடப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்


nagendhiran
செப் 11, 2024 10:06

தற்குறி வாதம்? நாட்டில் எத்தனை சமஉ எம்பி மந்திரிகள் உள்ளனர்? அவர்கள் சம்பளத்தையே நிறுத்திடலாம் வைங்க? அதனால் ஒரு பயனும் இல்லை? அந்த காலத்தில் இருந்தே மக்கள் வரி பணத்தில்தான் ஆட்சியே நடக்குது? இது புது கண்டுபிடிப்பா என்ன? அனால் நேரடி வரியே பாஜக ஆட்சியில்தான் இருமடங்கு ஊயர்ந்ததே? வெளிநாட்டுகாரன் இங்கு தொழில் தொடங்கினால் நம்"நாட்டு மக்களுக்குதான் வேலை வாய்ப்பும்? அதனால் ஏற்படும் மறைமுக வேலைவாயப்்பும் நம் நாட்டு மக்கள்தான் அனுபவீப்பார்கள்? பெரியவர்கள் யாரிடமாவது தெரிந்து கொண்டு பேசுப்பா?


Gopala Krishnan
செப் 11, 2024 09:26

எதுக்காக இவ்வளவு ஆர்பாட்டம், மக்கள் வரி பணத்தில் எல்லா சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளின் சம்பளத்தை குறையுங்கள் அதேபோல இவர்களுக்கு செலவு செய்யும் செலவினங்களை குறையுங்கள் மேலும் ஒருபடி சென்று அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படும் பென்சன் பணத்தை நிறுத்துங்கள். நாட்டின் பொருளாதார நிலை சிறிது மேம்படும் இதை செய்தாலே நாட்டின் மக்களுக்காக செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.. சாப்பிடும் உணவிற்கும் குடிக்கும் தண்ணீருக்கும் ஜிஎஸ்டி போட்டு வெளிநாட்டு காரன் கம்பெனி வைக்க வரியே இல்லை என்ற விதியை மாற்றி மக்கள் சுமையை குறைக்களாம்.. பாவம் நாம், நாம் தேர்ந்தெடுத்த நம் சக மனிதனிடமே நாம் பிச்சை எடுக்கிறோம் நம் வாழ்வாதாரத்திற்கு என்று மாறப்போகிறது நம் வாழ்கையை


மாயவரத்தான்
செப் 10, 2024 20:11

சிறு உணவகங்களுக்கு ஏற்கனவே ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது


M.Srinivasan
செப் 10, 2024 13:31

அத்தியாவசிய பொருட்கள் சிறு உணவகங்களுக்கு ஜிஎஸ்டி முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி எந்த எந்த துறைகளில் எவ்வளவு செலவிடப்படுகிறது என்ற விவரங்கள் வெளிப்படையாக பொதுவெளியில் அறிவிக்கப்பட வேண்டும்.


M.Srinivasan
செப் 13, 2024 08:45

எனது பதிவு?


N.Purushothaman
செப் 10, 2024 07:29

தமிழ்நாட்டுல கஞ்சா அதிக புழக்கத்துல இருக்கறதால அதுக்கு கூட பதினெட்டு சதவிகிதம் ஜி எஸ் டி போட்டு மாநில அரசுகிட்ட இருந்து கறக்கணும் ....


Rajarajan
செப் 10, 2024 04:06

இதெல்லாம் தேவையே இல்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி எல்லாம் சுற்றி வளைக்க அவசியமே இல்லை. நஷ்டத்தில் இயங்கும் அரசு துறை / பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடுங்கள் அல்லது தனியாருக்கு கொடுங்கள். சுமையும் தீர்ந்தது, செலவும் குறைந்தது. இது வருமானமாக நின்றது. இதை நாட்டின் மற்ற வளர்ச்சிக்கு, அத்தியாவசிய வளர்ச்சிக்கு மானியமாகவும் கொடுக்க உதவும். வந்தான், சென்றான், என்ன செய்தான் என்றா சொல்ல வேண்டும் ?? வந்தான், நின்றான், வென்றான், செய்தான் என்றே சொல்ல வேண்டும்.


அப்பாவி
செப் 10, 2024 00:50

நொறுக்குத்தீனி வாங்கி நிறைய சாப்புடுங்கோ. ஆரோக்கியமா இருப்பீங்க.


தாமரை மலர்கிறது
செப் 09, 2024 23:09

வரி விலக்கினால் ஏற்படும் நட்டத்தை சரிக்கட்ட, டோல்கேட் வரியை அதிகரிக்க வேண்டும். அல்லது பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது நல்லது. அரசு நஷ்டத்தில் இயங்க முடியாது. அல்லது மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் நிதியை குறைப்பது நல்லது. ஏனனில் லோக்கல் அரசியல்வாதிகள் பெரிய ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள்.


S SRINIVASAN
செப் 09, 2024 22:52

what about health insurance GST useless opposition they are and finance ministry wants to eat the human flush


சமீபத்திய செய்தி