உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத் ‛நீட் தேர்வில் முறைகேடு: 3 பேர் கைது

குஜராத் ‛நீட் தேர்வில் முறைகேடு: 3 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சூரத்: குஜராத்தில் நடந்த ‛‛நீட்'' தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வு, கடந்த, மே, 5ம் தேதி நாடு முழுதும், 571 நகரங்களில், 4,750 மையங்களில் நடந்தது. இதில், 23 லட்சத்து, 33,297 பேர் தேர்வு எழுதினர். தேர்வு நாளன்று, ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை மறுத்தது. இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் ‛‛நீட்'' தேர்வில் பலவழிகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.இந்நிலையில் குஜராத் மாநிலம் பன்ச் மகால் மாவட்டம் கோத்ராவில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளதுஇது குறி்த்த விசாரணையில், ‛நீட்‛‛ தேர்வு முடிந்த பிறகு 26 மாணவர்களின் தேர்வுத்தாள்களை பதில் எழுதி அனுப்புவதாகக்கூறி ஒவ்வொரு மாணவரிடமும் இருந்து ரூ.10 லட்சம் வரையில் பேரம் பேசி பெற்றதாக தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் வாக்குமூலம் கொடுத்து உள்ளதாகவும் இதில் ரூ. 2 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது தெரியவந்தது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் மீது கோத்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் 13 பேர், ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 12:33

நீட் தேர்வைக் கொண்டு வந்த திமுக காங்கிரசும் அதே நீட்டை எதிர்ப்பது நாடகம். ஐஐடி களுக்கு நுழைவுத்தேர்வு கொண்டு வந்ததும் காங்கிரசுதான். அதனை எழுதாமலே ஐஐடியில் இடம் பெற்று படித்தது அவர்களது கூட்டாளி கெஜரி தானே?


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 10:40

இருபது லட்சம் பேருக்கு மேல் எழுதும் தேர்வுகளில் ஆங்காங்கே சிற்சில தவறுகள் நடக்கலாம். அதற்காக தேர்வின் மீது குறை கூறுவது அபத்தமானது.பொது மக்களிடையேயே நேர்மை குறைந்தால் அரசால் ஏதும் செய்ய முடியாது.


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 10:37

நமது மாநிலத்திலும் போட்டி தேர்வு விடைத்தாள்களை திருத்த கொண்டு செல்லும் வண்டியை நடுவில் நிறுத்தி அங்கேயே வேண்டிய தேர்வர்களின் விடைத்தாள்களில் விடைகளை பூர்த்தி செய்த அநியாயம் நடந்தது. இங்குள்ள சர்வீஸ் கமிஷனின் நேர்மை பற்றி உலகத்துக்கே தெரியும்.


Saravan Ravichandran
ஜூன் 14, 2024 22:23

பயங்கரமா முட்டு குடுக்கிறீர்கள் குஜராத்தில் நடக்கும் பிரச்னைக்கும் இங்கு நடக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்? அனால் நீட் தேர்வு கொண்டு வந்தது ப ஜ க . அப்போது எல்லாரும் அவர்களைத்தான் விமர்சிப்பார்கள்.


தமிழ்வேள்
ஜூன் 14, 2024 20:40

இது முறைகேடு அல்ல.மோசடி..திட்டத்துக்குள் நடக்கும் தவறுதான் முறைகேடு.. திட்டத்தின் பெயரை பயன்படுத்தி தகுதி அற்ற அல்லது குறைந்த நபர்களிடம் திட்டத்தின் வெளியே உள்ளவர்கள் செய்வது மோசடி ஆகும்.. இந்த குஜராத் நிகழ்வு மோசடி.... இதில் கைதேர்ந்த ஆட்கள் நமது திராவிட கும்பல்.


ஆகாஷ் ராஜ்
ஜூன் 14, 2024 20:35

குஜராத் மாடல் நாட்டுக்கே வழிகாட்டுது.


தாமரை மலர்கிறது
ஜூன் 14, 2024 20:03

வெறும் புகார் அடிப்படையில் செய்யப்பட்ட கைது தானே ஒழிய, எந்த குற்றமும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. நீட் மிக சிறப்பாக செயல்படுகிறது என்று வைத்தெரிச்சலில் எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியல் நீட் அமைப்பை பாடாய்படுத்துகிறது. ஏதாவது குற்றம் சொல்லி, நீட் எக்ஸாமை தடுத்து நிறுத்தி படிக்காத மண்டுகள் பணம் கொடுத்து டாக்டராக முயற்சி நடக்கிறது.


Sivakumar
ஜூன் 15, 2024 01:02

வெறுமனே ஒரு குற்றச்சாட்டை வைத்து ஒரு அமைச்சரை 2G ஊழல் செய்ததாக சொல்லி சிறையில் அடைத்து விசாரணை செய்யச்சொன்ன கட்சி இப்போ உங்களுக்கு வந்த தக்காளி சட்னியா ? கடைசி வரை 2G குற்றாச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் அவர் நிரபராதியாக விடுவிக்கப்பட்டார். கேஜ்ரிவாலும் குற்றம் சாட்டப்பட்டவரே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை