-எல்லை அருகே துப்பாக்கிகள் கண்டெடுப்பு
சண்டிகர்:பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், சர்வதேச எல்லை அருகே, 4 கைத்துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் கைப்பற்றப்பட்டன.பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், -பாகிஸ்தான் எல்லை அருகே ரஜதல் கிராமத்தில் நேற்று, 4 கைத்துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் கிடந்தன. கிராம மக்கள் கொடுத்த தகவல்படி அங்கு சென்ற எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவற்றைக் கைப்பற்றினர். விசாரணை நடக்கிறது.