உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., ஆட்சிக்கு ஊழலே சாட்சி ஹாலப்பா ஆச்சார் காட்டம்

காங்., ஆட்சிக்கு ஊழலே சாட்சி ஹாலப்பா ஆச்சார் காட்டம்

கொப்பால்: ''காங்கிரஸ் ஆட்சிக்கு ஊழலே சாட்சி,'' என்று, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் கூறி உள்ளார்.பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் கொப்பாலில் நேற்று அளித்த பேட்டி:வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்துவதில் காங்கிரஸ் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. 'மூடா' முறைகேடு, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழல் உட்பட பல முறைகேடுகளில் ஈடுபட்டு நிர்வாகத்தை சீர்குலைத்துள்ளனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல சாதனைகள் செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். காங்கிரஸ் ஆட்சிக்கு ஊழலே சாட்சி.கர்நாடக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் நடக்கலாம் என்பதால், பா.ஜ., தொண்டர்கள் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். காங்கிரஸ் அரசின் தோல்வியை வீடு வீடாக எடுத்து சொல்ல வேண்டும்.வாக்குறுதி பெயரில் ஆட்சிக்கு வந்து, அரசின் கஜானாவை காலியாகி விட்டனர். வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க கூட பணம் இல்லை. எப்படி ஊழல் செய்யலாம் என்பதில் மும்முரமாக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்