வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மனநல பாதிப்பு ஒரு நாடகம். சரியாக உதைத்தால் அவன் உண்மையை கூறுவான். ஒன்று பாகிஸ்தான் ஏவி விட்டிருக்கவேண்டும். அல்லது தேசதுரோகிகள் ஏவி விட்டிருக்கவேண்டும். இங்கேயும் யார் அந்த சார்?
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் உள்ளது. சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி என்ற அமைப்பினரால் நிர்வகிக்கப்படும் அந்த கோவிலில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுல்பான் என்பவர் நேற்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்தார்.அதைப் பார்த்த பக்தர்கள், அவரிடம் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசிய அந்த நபர், அங்கிருந்து நகன்றார். சிறிது நேரம் கழித்து, உணவு தயாரிக்கும் அறை அருகே, இரும்புக்கம்பியுடன் வந்த அவர், அங்கு நின்று கொண்டிருந்தவர்கொடூரமாக தாக்கினார். இதில், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.அங்கு அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அவருக்கு லேசான மனநல பாதிப்பு இருந்ததை கண்டறிந்தனர். அவருடன் வந்த மற்றொருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மனநல பாதிப்பு ஒரு நாடகம். சரியாக உதைத்தால் அவன் உண்மையை கூறுவான். ஒன்று பாகிஸ்தான் ஏவி விட்டிருக்கவேண்டும். அல்லது தேசதுரோகிகள் ஏவி விட்டிருக்கவேண்டும். இங்கேயும் யார் அந்த சார்?