உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் விடிய விடிய கனமழை: விமானநிலைய முகப்பு கூரை இடிந்து விபத்து

டில்லியில் விடிய விடிய கனமழை: விமானநிலைய முகப்பு கூரை இடிந்து விபத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b16maxsw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லியில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று( ஜூன் 27) இரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுடன், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். நேற்று காலை முதல் இன்று காலை 8:30 மணி வரையில் டில்லியில் 228 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. 1936க்கு பிறகு அதிகபட்ச மழைப்பொழிவை டில்லி சந்தித்து உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

விமானநிலையத்தில் விபத்து

டில்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக விமானநிலையத்தின் முகப்பு கூரை இடிந்து விழுந்தது. விபத்து காரணமாக விமானநிலைய வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

J.Isaac
ஜூன் 28, 2024 20:27

கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பு தனியார்வசம் தானே ? 2009 தி்முக காங்கிரஸ் ஆட்சியில் திறக்கப்பட்டதால் கண்டன தீர்மானம் நிறைவேற்றலாம்?


சண்முகம்
ஜூன் 28, 2024 17:07

நாலு பாலத்தை இடிஞ்சு விழ கட்டின பீகார்காரன் இதையும் கட்டியிருப்பானோ?


P. SRINIVASALU
ஜூன் 28, 2024 16:46

பிஜேபியின் மேக் இன் இந்தியா. இப்படித்தான் இருக்கும்.


Bye Pass
ஜூன் 28, 2024 13:51

முயற்சி செய்து பாருங்க


Velan Iyengaar
ஜூன் 28, 2024 12:10

கால கொடுமை


Velan Iyengaar
ஜூன் 28, 2024 12:02

இந்த விமான நிலைய முனைய ஒப்பந்தம் எடுத்த GMR நிறுவனம் தேர்தல் பத்திரம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களில் வழங்கியதும் அதில் BJ கட்சி குளிர்காய்ந்ததும் உண்மை


ஆரூர் ரங்
ஜூன் 28, 2024 12:50

டெல்லி விமான நிலையம் கட்டி திறப்பு விழா நடந்தது திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில். ஆனா திமுக தேர்தல் பத்திரங்கள் வாங்கியது லாட்டரி வியாபாரியிடம்.


Varadarajan Nagarajan
ஜூன் 28, 2024 11:13

இயற்கை சீற்றங்ககளால் ஏற்படும் பேராபத்துக்களை மனிதனால் தடுக்கமுடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிப்புகளுக்கும் நமது அனுதாபங்களை தெரிவிப்பது மானுட இயல்பு. அதைவிட்டு சந்தோஷப்படுவது ஈன குணம். வக்கிர குணம்கொண்ட ஒருசிலர் இதுபோல நிகழ்வுகளுக்காகவே ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.


Vathsan
ஜூன் 28, 2024 11:02

Buildings, roads, bridges collapsing is a hallmark of Modi government...


Velan Iyengaar
ஜூன் 28, 2024 09:51

எதாவது ஒன்னு உருப்படியா செய்ய முடியுதா இவனுங்களுக்கு??


Mario
ஜூன் 28, 2024 09:41

மோடி திறந்து வைத்த எல்லாமே பணால் அடல் சேது பாலம், ராமர் கோயில் இப்போ இது, நல்ல ராசியான கை


பாமரன்
ஜூன் 28, 2024 10:07

இல்லீங்கோ... டில்லி விமான நிலையம் பல வருடங்கள் முன்பே தனியார்மயம் ஆகி புதிதாக கட்டப்பட்ட முனையம் மன்மோகன் சிங்கால் திறக்கப்பட்டது. அதனால் இதற்கு காங் அவுரங்கசீப் நேரு டீம்காதான் காரணம்... ஜி பேரை இன்னும் பெயிண்ட் அடிக்க விடலைன்னு வேனும்னா டீம்காவை அல்லது திராவிஷத்தை திட்டலாம் ?


Velan Iyengaar
ஜூன் 28, 2024 10:20

செங்கோல் உடையுமா??


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ