உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் கனமழை: விமான சேவை பாதிப்பு

டில்லியில் கனமழை: விமான சேவை பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தலைநகர் டில்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து டில்லி, உத்திரபிரதேசம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து தலைநகர் டில்லி , என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டம் ஆகிய பகுதிகளில் இன்று (31.07.2024) மாலை முதல் கனமழை பெய்ய துவங்கி 2 மணி நேரம் பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்க வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகருக்கு திருப்பி விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூலை 31, 2024 22:09

மக்கள் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் விமான சேவை பாதிப்பு என்று விமான சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கறீர்களே...??


ganapathy
ஆக 01, 2024 01:11

விமானத்தில் செல்பவர்கள் மனிதர்களில்லையா?


Ramesh Sargam
ஜூலை 31, 2024 21:04

மத்திய அரசும் கனமழை எச்சரிக்கை டெல்லி அரசுக்கு வழங்கி உள்ளது. டெல்லி அரசு உடனே தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து, மக்களை வெள்ளபாதுகாப்பிலிருந்து காப்பாற்ற முயலவேண்டும். இல்லையென்றால், வயநாடு நிலைமைதான்... வேண்டாம் அந்த நிலைமை...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ