மேலும் செய்திகள்
தேசிய நலன் மீதான பற்றால் உச்சத்தை தொட்டவர் பிரதமர் மோடி; அமித் ஷா
2 hour(s) ago | 1
இளம்பெண் தற்கொலை முயற்சி
4 hour(s) ago
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
4 hour(s) ago
4 பேரிடம் ரூ.1.61 லட்சம் அபேஸ்
4 hour(s) ago
ஹாசன், : நான் இன்னும் எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பேன் என, தெரியவில்லை. இருக்கும் வரை மாநில மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது செய்வேன், என ம.ஜ.த., முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறி, கண்ணீர் சிந்தினார்.ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:நான் முதல்வராக, பிரதமராக இருந்த போது விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தினேன். மானியங்கள் வழங்கினேன்.காவிரி தண்ணீர் விஷயத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடகாவுக்கு செய்யும் அநியாயத்தை பற்றி, சில நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.அவரும், '28 தொகுதிகளையும் வெற்றி பெற்று தாருங்கள். காவிரி விவாதத்தை தீர்த்து வைக்கிறேன்' என, உறுதி அளித்துள்ளார்.எனவே 28 தொகுதிகளிலும், கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.நான் இன்னும் எத்தனை ஆண்டுகள், உயிரோடு இருப்பேன் என்பது தெரியாது. ஆனால் இருக்கும் வரை, மாநில மக்களுக்கும், விவசாயிகளுக்கு நல்லது செய்ய உறுதி பூண்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 1
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago