உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உருவ கேலிக்கு அஞ்ச மாட்டேன்: முதலிடம் பிடித்த மாணவி உறுதி

உருவ கேலிக்கு அஞ்ச மாட்டேன்: முதலிடம் பிடித்த மாணவி உறுதி

புதுடில்லி : உத்தர பிரதேசத்தில், 10வது பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றம் குறித்து சமூக வலைதளத்தில் கிண்டல் செய்யப்பட்டதற்கு, மாணவி துணிச்சலாக பதில் அளித்துள்ளார்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் 10வது பொது தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. பிராச்சி நிகாம் என்ற மாணவி, 98.50 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அவரது புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.மாணவி பிராச்சிக்கு முகத்தில் ரோமங்கள் அதிகம் இருப்பதால், ஆண்களை போல அவருக்கு லேசான மீசை வளர்ந்துள்ளது. பிராச்சியின் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பலர் கிண்டல் செய்ய துவங்கினர். இது குறித்து மாணவி பிராச்சி நிகாம் கூறியதாவது: என் புகைப்படத்தை பார்த்து சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்தாலும், என்னை வாழ்த்திய பலருக்கு நன்றி. அந்த கிண்டல்கள் என்னை பெரிதாக பாதிக்கவில்லை. மதிப்பெண்கள் தான் முக்கியமே தவிர, என் தோற்றம் அல்ல.கிண்டல் செய்பவர்கள் அதை தொடரலாம். அதற்காக நான் கவலைப்பட மாட்டேன். தோற்றத்திற்காக சாணக்கியரே கிண்டல் செய்யப்பட்டுள்ளார். அதெல்லாம் அவரை பாதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.காங்., பொதுச்செயலர் பிரியங்கா, மாணவி பிராச்சியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அப்போது, இந்த கிண்டல்களை புறந்தள்ளும்படி அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
ஏப் 29, 2024 08:47

உருவகேலி செய்பவர்களை ...அடித்தது போல் பேசி உள்ளீர்கள் ,..வாழ்த்துக்கள் ....உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் .


Kumar Kumzi
ஏப் 29, 2024 06:08

நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி


J.V. Iyer
ஏப் 29, 2024 05:44

உங்கள் மனஉறுதிக்கு பாராட்டுக்கள் இதுவே உங்களை உச்சத்திற்கு கொண்டு சேர்க்கும் உங்களை கேலிசெய்தவர்கள் உங்கள் கலைப்பிடிக்கும் நாள் தொலைவில் இல்லை மகளே


Kasimani Baskaran
ஏப் 29, 2024 05:13

மாநிலத்திலேயே முதலாவதாக வந்தமைக்கு பாராட்டுகள் உருவத்தைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னுமொரு பாராட்டு


Nagercoil Suresh
ஏப் 29, 2024 03:40

உபி,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ, ஆட்சி நடக்கிறது, இதிலிருந்து தெரிகிறது மாநிலத்தின் வளர்ச்சியும் அவர்களின் அறியாமையும் சமீபத்தில் ராணுவ அமைச்சர் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்யப்போகிறதாக கூறுகிறார் உருவத்தை பார்க்காதே உள்ளத்தை பார் என்பார்கள் வாழ்த்துக்கள் சகோதிரி மேன்மேலும் வளர்ந்து மாநிலத்தை காப்பாத்து அதுவே நாட்டை வளர்ச்சியடைய செய்யும்


தாமரை மலர்கிறது
ஏப் 29, 2024 03:31

உருவகேலி செய்வது தவறு எவரும் நூறு சதவீதம் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை அறுபதிலிருந்து என்பது சதவீதம் மட்டுமே அதனால் நிறைய பெண்களுக்கு நடிகைகள் உட்பட மீசை தாடி வளரும் ஆனால் அவர்கள் லேசர் மூலம் சரிசெய்து கொள்கிறார்கள் வறுமையில் உள்ள பெண்ணால் அதை செய்ய முடியாது ஆனால் பிற்காலத்தில் அவரும் செய்துகொள்வார் எழுபது சதவீதம் பெண்ணாக உள்ளவருக்கு மீசை தாடி வளர்வது இயற்கை தான் ஐம்பது சதவீதத்தில் இருப்பவர்கள் தான் குழப்பவாதிகளாக மாறுகிறார்கள் ஆனால் குழப்பவாதிகளையும் பிறந்த பாலில் இருப்பதை தான் சமூகம் வலியுறுத்த வேண்டும்


Sankar Ramu
ஏப் 29, 2024 03:05

வாழ்த்துக்கள் பிராச்சி ?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ