உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விருந்தினர் இல்லத்தில் பொருட்கள் மாயம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோஹிணிக்கு சிக்கல்

விருந்தினர் இல்லத்தில் பொருட்கள் மாயம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோஹிணிக்கு சிக்கல்

மைசூரு: மைசூரு விருந்தினர் இல்லத்தில், விலை உயர்ந்த பொருட்கள் மாயமான விவகாரத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோஹிணி சிந்துாரியின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும்படி, தலைமைச் செயலருக்கு, நிர்வாக பயிற்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோஹிணி சிந்துாரி, மைசூரு மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டபோது, தற்காலிகமாக மைசூரின் நிர்வாக பயிற்சி மையத்தின் வளாகத்தில் உள்ள, விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார்.கடந்த 2020 அக்டோபர் 2 முதல், நவம்பர் 4 வரை, அங்கு தங்கிய அவர், அதன்பின் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தார். அவர் சென்ற பின், விருந்தனர் இல்லத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் மர்மமான முறையில் மாயமானது தெரியவந்தது.இந்தப் பொருட்களை தன்னுடன் கொண்டு சென்றதாக ரோஹிணி மீது புகார் எழுந்தது. பொருட்களை பட்டியலிட்டு, அவற்றை திருப்பி ஒப்படைக்கும்படி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, 2020 டிசம்பர் 16, 2021 ஜனவரி 8, ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில், மூன்று கடிதங்களை மைசூரு நிர்வாக பயிற்சி மையத்தினர் எழுதியிருந்தனர். இதற்கு ரோஹிணி சிந்துாரி பதிலளிக்கவில்லை.அதன்பின் 2022 நவம்பர் 30ல், நிர்வாக பயிற்சி நிர்வாகம், மற்றொரு கடிதம் எழுதியது. இதற்கு பதிலளித்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள், 'பயிற்சி மையத்தின் விருந்தினர் இல்லத்தில் இருந்த பொருட்கள் எதுவும் இங்கு இல்லை' என கூறினர்.இதற்கிடையில், அப்போது மைசூரு மாநகராட்சி கமிஷனராக இருந்த ஷில்பா நாக் - ரோஹிணி இடையே நிலவிய பனிப்போர் காரணமாக, அவரையும் கலெக்டர் ரோஹிணி சிந்துாரியையும் அரசு இடமாற்றம் செய்தது. அப்போது, ஹிந்து அறநிலையத் துறை கமிஷனராக ரோஹிணி இடமாற்றம் செய்யப்பட்டார்.அப்போதும் கடிதம் எழுதிய நிர்வாக பயிற்சி நிறுவனம், 'விருந்தினர் இல்லத்தின் பொருட்களை, திருப்பித் தாருங்கள். இல்லாவிட்டால் அதற்கான தொகையை தாருங்கள்' என, கேட்டது. இதற்கும் அவர் பதிலளிக்கவில்லை.இதுகுறித்து, நிர்வாக மேம்பாட்டுத் துறை தலைமை செயலருக்கு, நிர்வாக பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:மைசூரின் விருந்தினர் இல்லத்தில், ரோஹிணி சிந்துாரி சில மாதங்கள் தங்கியிருந்தார். அவர் காலி செய்து சென்ற பின், விருந்தினர் இல்லத்தில் பல பொருட்களை காணவில்லை.தொலைபேசி மேஜை, கோட் ஹேங்கர், பிளாங்கெட், மைக்ரோ ஓவன், மெத்தை, மூங்கில் நாற்காலிகள், கம்ப்யூட்டர் மவுஸ், ட்ரே, யோகா மேட், தட்டுகள், டீப்பாய் உட்பட பல்வேறு பொருட்கள் மாயமாகின. இவற்றின் மதிப்பு 77,296 ரூபாய்.இந்த தொகையை, ரோஹிணி சிந்துாரியின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். 'டிடி' மூலமாக மைசூரின் நிர்வாக பயிற்சி மைய இயக்குனர் பெயருக்கு அனுப்புங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

என்றும் இந்தியன்
ஜூன் 03, 2024 17:51

திராவிட மாடல் அரசுக்கு மாற்றல் செய்யுங்கள், இவரிடமிருந்து கற்றுக்கொள்ள மாடல் அரசு மிக மிக ஆவலாக இருக்கின்றது


tmranganathan
ஜூன் 01, 2024 17:33

வ வ கிரி ப்ரெசிடெண்ட் அபிடேர் டெமிட்டிங் ஆபீஸ் அஸ் ப்ரெசிடெண்ட் டுக் அவா6எனி வழுஅப்ளே பிரேம் Rashtrapathi bhavan.he was let off.Double Standards Isi it not?


Chandrasekaran Balasubramaniam
ஜூன் 01, 2024 09:59

பொருட்களை எடுத்து சென்றது உயர் அதிகாரி. பொறுப்பு அலுவலர் அவருக்கு கீழ் உள்ளவர். உயர்நிலையில் உள்ளவர் எடுத்து சென்றால் இவர் எப்படி பொறுப்பாவார்.


jayvee
ஜூன் 01, 2024 08:08

இது IPS க்கும் IAS க்கும் நடக்கும் மோதலின் உச்சக்கட்டம்.. இதை சரிசெய்யமுடியாத காங்கிரஸ் அரசு .. அது சரி சொந்த கட்சியிலே கோஷ்டிமோதலை சரிசெய்ய முடியாத கட்சி


TAMIZ JOSH
ஜூன் 01, 2024 11:54

உடனே காங்கிரஸ் அது இது, என்ன ஓய் எப்போ எப்போ காத்திருந்த மாதிரி தெரியுது


Suresh R
ஜூன் 01, 2024 00:39

திஸ் ஐஸ் a political game. How government officials can stoop down under the pressure of another government official Shame Why it is coming to press ? Clearly tells it’s a political game


Suresh Kumar
மே 31, 2024 23:55

கேவலமான செயல். இதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாம்.. இவர்களது செயல்பாடுகலில் எப்படி நேர்மை இருக்கும்?.


SUBRAMANI
மே 31, 2024 21:04

It is not the fault of official who was staying there,the responsibility is with care taker of the rest house.


Chandrasekaran Balasubramaniam
ஜூன் 01, 2024 10:01

No. He is not responsible bcz. She is Higher official. Useless.


Sankaran Natarajan
மே 31, 2024 18:53

அங்குள்ள அலுவலர்களை முதலில் விசாரிக்க வேண்டும். அசையும் / அசையாச் சொத்துக்களுக்கு இன்வென்டரி உள்ளது. அவர் குடிபுகும் போது என்னென்ன பொருட்கள் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டதோ அவற்றை அவர் காலி செய்யும் போது திரும்பப் பெற்றிருக்க வேண்டும். எழுத்துப் பூர்வ நடைமுறைகள் அதற்கு உள்ளன. கீழ் மட்டத்தில் நடைபெறும் சில்லறை திருட்டுக்கு உயர்மட்ட அதிகாரியை பொறுப்பாக்குவது முறையற்றது. இதில் வேறு ஏதோ அரசியல் உள்ளது.


RAM
மே 31, 2024 16:21

உண்மை தன்மையை முதலில் கண்டறிய வேண்டும். ஆதாரம் இல்லாமல், ஒரு ஐஏஎஸ் அதிகாரியை கலங்கப்படுத்துவது போல் உள்ளது.


enkeyem
மே 31, 2024 12:28

அழகா இருந்தால் திருட மாட்டார்களா? என்ன லாஜிக்டா இது?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை