மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
தங்கவயல்: 'கிராமத்தில் இடுகாடு வசதி வேண்டும்' என, தாலுகா அலுவலகத்தில் இளைஞர் சங்கத்தினர் மனு அளித்தனர்.தங்கவயலின் ஜக்ராச குப்பா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட குருபூர் கிராமத்திற்கு இடுகாட்டுக்கு, அரசு நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, இறந்தவர்களின் உடலை புதைக்க விடாமல் தடுத்து தகராறு செய்கின்றனர்.இக்கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்த லட்சுமம்மா என்பவரின் உடலை புதைக்க விடாமல் தடுத்து தகராறு செய்தனர். கிராம மக்கள் ஒருங்கிணைந்து போலீசார் உதவியுடன் உடலை அடக்கம் செய்தனர். எனவே, இடுகாடு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று தாலுகா அலுவலகத்தில் குருபூர் கிராம இளைஞர் சங்கத்தினர் மனு அளித்தனர்.சங்கத் தலைவர் மஞ்சுநாத் கூறுகையில், ''ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து ஏற்கனவே மனு அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறினால் தாசில்தார் மீது கோலார் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்வோம்,'' என்றார்.சீனிவாஸ், ஸ்ரீநாத்ரெட்டி, சுப்பிரமணியா, ரகுநாத், மது, ஆனந்த ரெட்டி உட்பட பலர் உடன் இருந்தனர்.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7