உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நானும் ரவுடிதான்; வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை விரட்டி அடித்த வளர்ப்பு நாய்கள்!!

நானும் ரவுடிதான்; வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை விரட்டி அடித்த வளர்ப்பு நாய்கள்!!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தரகண்டில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை வளர்ப்பு நாய்கள் விரட்டி அடித்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு வீட்டின் வாசலில் வளர்ப்பு பிராணியான 3 நாய்கள் அமர்ந்திருக்கின்றன. அப்போது, யாரும் எதிர்பார்க்காத போது, சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்து, நாயை வேட்டையாட முயன்றுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vqmgb731&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், சிறுத்தையிடம் இருந்து தப்பித்த நாய், அதனை திருப்பிக் கடிக்க முயன்றுள்ளது. இதனால், பீதியடைந்த சிறுத்தை அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளது. பின்னர், நாய்களும் சிறுத்தையை பின் தொடர்ந்து சென்று குரைக்கின்றன.வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தாமதமாக உணர்ந்த வீட்டு உரிமையாளர், பீதியுடன் வீட்டு வாசல் பக்கம் வந்து எட்டிப் பார்க்கின்றார். பின்னர், சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போது, சிறுத்தை வந்து சென்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை