உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தென்மேற்கு பருவ மழையால் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

தென்மேற்கு பருவ மழையால் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

பெங்களூரு: தென்மேற்கு பருவ மழையால், நீர் மின் உற்பத்தி கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஜூலையில் 1,136.31 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.கர்நாடகாவில் பரவலாக மழை பெய்கிறது. மின் உற்பத்தி அணைகளான லிங்கனமக்கி, சூபா, மானி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.இது நீர் மின் உற்பத்திக்கு, வரப்பிரசாதமாக இருந்தது. நீர் மின் உற்பத்தி அதிகரித்தது. அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான அழுத்தம் குறைந்தது.நீர் மின் உற்பத்தி, கடந்தாண்டு ஜூலையில், 756.61 மில்லியன் யூனிட்டாக இருந்தது.நடப்பாண்டு இதே காலகட்டத்தில், 1,136.31 மில்லியன் யூனிட்டானது. கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் வாரம், 209.10 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகி இருந்தது. இம்முறை ஆகஸ்ட் முதல் வாரம், 348.89 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியானது.இது குறித்து, மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:தென் மேற்கு பருவ மழை துவங்கியதில் இருந்து, ஷராவதி நீர் மின் உற்பத்தி நிலையத்தின் 10 மின் யூனிட்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான அழுத்தம் குறைந்தது. தற்போது நீர் மின் உற்பத்தி அணைகளின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளது. 250 நாட்கள் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு, அணைகளில் நீர் இருப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ