உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடிக்கு இது அப்பட்டமான தோல்வி இண்டியா கூட்டணி கூட்டத்தில் கார்கே

மோடிக்கு இது அப்பட்டமான தோல்வி இண்டியா கூட்டணி கூட்டத்தில் கார்கே

புதுடில்லி: ‛‛ இண்டியா கூட்டணி'' கூட்டம் டில்லியில் துவங்கியது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கூட்ட இறுதியில் பேசிய காங்., தலைவர் கார்கே மோடிக்கு இது அப்பட்டமான தோல்வி என்றார். லோக்சபா தேர்தலில் இக்கூட்டணிக்கு 232 எம்.பி.க்கள் உள்ளனர். பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இன்று இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டம் டில்லியில் காங்.,தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் கூடியது.இக்கூட்டத்தில் காங்., மூத்த தலைவர் சோனியா, ராகுல், சரத்பவார், சுப்ரியா சுலே, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா கட்சியின் முதல்வர் சம்பய் சோரன், கல்பனா. சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.. பெரும்பான்மை ஆதரவை திரட்டி மத்தியில் ஆட்சி அமைக்கலாமா ? அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமரலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.கூட்ட முடிவில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: . மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு கிடைதத்து அரசியல் தோல்வி அல்ல அப்பட்டமான தோல்வி.மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி மோடிக்கு எதிரான வெற்றியாகும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Rahulakumar Subramaniam
ஜூன் 08, 2024 15:31

99 ஐ ஆவது தனியா எடுத்தீர்களா ?


Swaminathan L
ஜூன் 08, 2024 10:35

என்ன செய்ய? அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை வெறுமே பேசிப் பேசி குமைச்சலை வெளிப்படுத்த மட்டுமே இண்டி கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறது. அது வரை இந்த கூட்டணி நிலைக்குமா? பிரதமர் மோடியின் கணிப்பு தவறானது உண்மை. ஆனால், வாக்காளர்களின் கணிப்பு தவறவில்லை. மீண்டும் மோடி என்றே வாக்காளர்கள் கணித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் மோடிக்கு அப்பட்டமான தோல்வி என்றால் இண்டி கூட்டணிக்கு? ஆந்திராவிலும், பீஹாரிலும் என்டிஏ கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. எனவே, இனிமேலாவது மோடி, அதானி, அம்பானி விமர்சனங்களைக் குறைத்துக் கொண்டு தன் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட ஏதாவது உருப்படியாக செய்யட்டும்.


visu
ஜூன் 08, 2024 08:00

ஹாஹா பெண்களுக்கு மாதம் 8500 தருகிறோம் என்று இஷ்டத்துக்கு இலவசத்தை அல்லி விட்டு ஒட்டு வாங்கியாச்சு சரி 293 வாங்கினால் அப்பப்ட்டமான தோல்வி என்றால் 99 வெற்றியா


Ganesun Iyer
ஜூன் 07, 2024 14:51

அதுசரி, நீங்க 99 வாங்கியிருக்கிறீங்களே அத பத்தி உங்க கட்சி மீட்டிங்கில் பேசுங்க ....


MADHAVA NANDAN
ஜூன் 07, 2024 09:02

உங்கள் திருட்டு கும்பலையும் பெரும்பான்மையான மக்கள் நிராகரித்துள்ளனர் அதோடு 15 ஆண்டுகளாகியும் உங்கள் கொள்ளைக் கூட்டத்தின் அராஜகங்களை மக்கள் மறக்க முடியவில்லையே . அடுத்தவர்களை பேசுவதற்கு வெட்கம் இல்லையா திரு மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கொள்ளைக்கார கும்பல் தலைவர்களே


skv srinivasankrishnaveni
ஜூன் 07, 2024 08:51

புளுகுமூட்டைகளா கவனமாப்பேசுங்க காங்கிரெஸ்க்கு கிடைச்சது எவ்ளோ கூட்டங்களுக்கு எவ்ளோன்னு கணக்குப்பாருங்கய்யா காங்கிரெஸ்க்குத்தனியா 22 தான்யா மற்றவைகள் கூட்டங்களுக்கே தான் புரியுதாஆஆஆ , பிஜேபி க்குத்தஞா கிடைச்சவை 200 கூட்டணிகளால் மீதி அப்படியும் இந்தியாகூட்டாணியவுடவே அதிகம் thaaaaaaaaaaaan


sri
ஜூன் 06, 2024 12:51

99 இடங்களில் கூட்டணி கட்சிகளின் தயவால் வெற்றி பெற்றதை சொன்னால் இவர் பேச்சுக்கு மதிப்பு இருக்கும்


Sck
ஜூன் 06, 2024 12:35

மொத்த இண்டி கூட்டணி வென்ற சீட் 232 பஜக தனித்து வென்றது 240 சீட். கார்கே மூப்பின் காரணமாக உளற துவங்கி விட்டார்.


பேசும் தமிழன்
ஜூன் 06, 2024 08:12

தனியாக 240 சீட் வெற்றி பெற்ற பிஜெபி க்கு இது தோல்வி.... 24 கட்சிகள் சேர்ந்து 234 சீட் வெற்றி பெற்ற உங்களுக்கு இது வெற்றி.... அவர் 10 ஆவது பெயில்.... நீங்கள் 3 ஆவது பாஸ்... அப்படி தானே ???? இப்படி எதையாவது சொல்லி மனதை தேற்றி கொள்ள வேண்டியது தான்.... வேறு வழியில்லை.


RAAJA69
ஜூன் 06, 2024 07:47

மூடர்கள் புத்திமான்களால் வழி நடத்தப்படுகிறார்கள் என்ற சொலவடை உணடு. இப்படியாவது பேசி சந்தோஷம் அடையட்டுமே.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை