உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது; ஆய்வறிக்கையில் குட் நியூஸ்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது; ஆய்வறிக்கையில் குட் நியூஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. நடப்பாண்டு உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.2ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.2025-26ம் ஆண்டில் உலக பொருளாதாரம் குறித்து நிதி சேவைகள் நிறுவனம் மூடிஸ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பணவீக்கம், கொரோனா தொற்று மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரால் பாதிக்கப்பட்டு இருந்த உலக பொருளாதாரம் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது.

பணவீக்கம்

நடப்பாண்டு உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.2ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. 2025ம் ஆண்டு இந்த வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும். 2026ம் ஆண்டில் 6.5 சதவீதமாக குறையும். ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள பணவீக்க இலக்கை அடைய வேண்டும் என்றால் உணவு பொருட்கள் விலை குறைய வேண்டும். காய்கறி விலை அதிகரித்தது காரணமாக, அக்டோபர் மாதம் மொத்த பணவீக்கம் 6.2 சதவீதமாக உயர்ந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அப்பாவி
நவ 16, 2024 19:28

இந்த Moody's யார் தெரியுமா? 2008 ல அமெரிக்கப் பொருளாதாரம் சூப்பரா போய்க்கிட்டிருக்குன்னு அறிக்கை குடுத்த கம்பெனி. வாரன் பஃபெட் இதில் பிரதான ஷேர் ஹோல்டர். 2008 ல வீட்டுப் பத்திரக் கடன்களின் தரம் A நு அடிச்சு உட்டது இந்த நிறுவனம். அதெல்லாம் டுபாக்கூர் அறிக்கைன்னு நிருபிச்சது காலம்.


அப்பாவி
நவ 16, 2024 17:36

விரைவில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடுன்னு பணத்தை பங்குசந்தையில் போட்டு அள்ளிக்கிணு போவாங்கன்னு பொருள் காண்க.


Indian
நவ 16, 2024 15:48

உண்மை செய்தி அல்ல ...விலை வாசி கடும் உயர்வு ...இந்தியா ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே செல்கிறது .,


Rajarajan
நவ 16, 2024 12:53

பணிநியமனத்தில் பஞ்சபடி கொடுக்கவேண்டும் என்று இருந்தால் இருக்கட்டுமே. அதனாலென்ன ?? நஷ்டத்தில் நடந்தால், மொத்தமாக இழுத்து மூடக்கூடாது / தனியாருக்கு தரக்கூடாது என்று இல்லையே. அரசு விமான கம்பெனி மற்றும் தொலைபேசி நிறுவனம் அப்படித்தானே ஆயிற்று. அதுபோல தானே மற்றதும் விரைவில்.


Subash BV
நவ 16, 2024 12:12

Why search for job. Become an entrepreneur. Modiji creating the opportunities.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 10:19

நாட்டிலுள்ள பல இடதுசாரி ஆதரவு மீடியாக்கள் கூட ஒப்புக்கொள்ளும் உண்மை இது ..... பாஜகவின் ஆட்சியின் குறைகளை விட நிறைகள் மிகவும் அதிகம் .....


Barakat Ali
நவ 16, 2024 09:54

வாக்குவங்கிக்காக மாநில அரசுகள் இலவசங்களை வாரி வழங்குவதை இதனுடன் சேர்த்தே யோசிக்கும் விசித்திர மனிதர்கள் ..... இதனால் பொருளாதாரம் நாசமாகும் என்று தெரிந்தாலும் அவரவர் அடிமையாக இருக்கும் கட்சிகளை ஆதரிப்பார்கள் ....


ஆரூர் ரங்
நவ 16, 2024 09:13

வளர்ச்சிக்கேற்ப தினக்கூலி வாங்கும் எலக்ட்ரீசியன், பிளம்பர், மேஸ்திரி சம்பளமும் கடுமையாகக் கூடியுள்ளது.இதனால் மற்ற விலைவாசிகள் மீதும் பாதிப்பு. வெள்ளைக் காலர் வேலை செய்பவர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள். அவசர ரிப்பேர்க்கு ஆள்கிடைப்பதில்லை. குலத் தொழில்களை வெறுத்து டப்பா என்ஜினீயரிங் கல்லூரிகளில் BE படித்துவிட்டு டெலிவரி பாய் வேலை செய்பவர்கள் சிந்திக்க.


Duruvesan
நவ 16, 2024 09:57

சும்மா முட்டு குடுக்க வேணாம், என்ஜினீயர்ங் படிச்சா டெலிவரி பாய் வேலையா? விடியலும் மோடியும் செய்யும் ஆட்சி மகா மட்டம்.


Thiagarajan Subramanian
நவ 16, 2024 09:04

ஏழைகளையும் நடுத்தர மக்களையும் கசக்கி பிழிந்து வரி வரி என்று போட்டு கொன்றால் ஏன் வளர்ச்சி இருக்காது?


Subash BV
நவ 16, 2024 12:15

Only lazy and drunkards are poor. Dont play the old disk


Suppan
நவ 16, 2024 15:54

துருவேசன் ஐயா பல பொறியியற் கல்லூரிகளின் தரம் மிக மோசம் . அவைகளிலிருந்து படித்து வெளிவருபவர்களுக்கு எப்படி சரியான வேலை கிடைக்கும்?


MARI KUMAR
நவ 16, 2024 09:01

வாழ்த்துக்கள், பொருளாதார வளர்ச்சி மேலும் உச்சம் தொட வேண்டும்


Duruvesan
நவ 16, 2024 09:49

எந்த வளர்ச்சி?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை