உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய கடற்படை தளபதியும், ராணுவ தளபதியும் ஒரே "கிளாஸ் மேட்"

இந்திய கடற்படை தளபதியும், ராணுவ தளபதியும் ஒரே "கிளாஸ் மேட்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நம் நாட்டின் ராணுவ புதிய தலைமை தளபதியாக ஜெனரல் உபேந்திரா திவேதி இன்று (ஜூன் 30) பொறுப்பேற்றார். இந்திய கடற்படை தலைமை தளபதியாக உள்ள தினேஷ் குமாரும், இன்று ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதியும் ஒரே வகுப்பில் கல்வி பயின்று உள்ளனர்.இந்திய ராணுவ தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூன் 30) நிறைவு பெறுகிறது. புதிய ராணுவ தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி பொறுப்பேற்றார். உபேந்திரா, 1984 இல் தனது ராணுவ சேவையை ஜம்மு காஷ்மீர் காலாற்படையின் 18வது படையணியில் துவங்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t03rwiu9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 39 வருட காலமாக ராணுவ சேவை ஆற்றி வரும் உபேந்திரா, காஷ்மீரிலும், ராஜஸ்தானிலும் திறமையான வகையில் தனது படைபயணியை வழி நடத்தி உள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா பணியாற்றியுள்ளார்.

ஒரே 'கிளாஸ் மேட்'

இந்திய கடற்படையின், 26வது தலைமை தளபதியாக, தினேஷ் குமார் திரிபாதி, (வயது 60) பதவி வகித்து வருகிறார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பள்ளியில், 1970ம் ஆண்டு 5ம் வகுப்பு, தினேஷ் குமாரும், உபேந்திரா திவேதியும் கல்வி பயின்று உள்ளனர். இருவரும் ஒரே 'கிளாஸ் மேட்'. இரு அதிகாரிகளுக்கு இடையேயான வலுவான பிணைப்பையும் நீடித்த நட்பையும் எடுத்துக்காட்டுகிறது.

அஞ்சலி

மனோஜ் பாண்டே பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 26 மாத பதவிக்காலத்திற்கு பிறகு இன்று அவர் ஓய்வு பெறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழ்வேள்
ஜூன் 30, 2024 19:48

திராவிட இயக்க தலைவர்கள் கூட ஒரே ஹி..ஹி...ஹி.... பள்ளியில் பயின்று ஆசிரியர் பேராசிரியர் முனைவர் ஆக திகழ்ந்து தங்களைப்போல ஏகப்பட்ட ஹி.ஹி..ஹி...டிக்கெட்டுகளை உருவாக்கி உலவவிட்டு மாநிலத்தை குட்டி சுவர் ஆக்கியும் விட்டார்கள்.....அண்ணா/கருணா நாமம் வாழ்க..


kulandai kannan
ஜூன் 30, 2024 19:33

அவர்களது ஆசிரியர்களுக்குப் பெருமை


S. Gopalakrishnan
ஜூன் 30, 2024 16:25

அருமை ! அருமை !


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 14:43

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் P சிதம்பரம் ஒரே நேரத்தில் ஆசிரியராகவும் மாணவராகவும் இருந்ததாக படித்திருக்கிறேன். அதனால் என்ன?


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 02:19

த்விவேதி, த்ருபாதி இருவருமே பிராம்மணர்கள் ..... ஊ பீயீ ஸ் ஆதங்கம் .....


ديفيد رافائيل
ஜூன் 30, 2024 14:01

அதுக்கென்ன இப்போ


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை