உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குதிரைக்கு தொற்று பாதிப்பு

குதிரைக்கு தொற்று பாதிப்பு

பெங்களூரு, ; பெங்களூரின், டி.ஜெ.ஹள்ளியில் வசிக்கும் ஷெரிப் என்பவரின் குதிரைக்கு, உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. கால்நடை டாக்டர்கள் பரிசோதித்ததில், குதிரைக்கு 'கிளாண்டர்ஸ்' தொற்று உறுதியானது.இதையறிந்து எச்சரிக்கை அடைந்த கால்நடைத்துறை, டி.ஜெ.ஹள்ளி மத்திய இடத்தில் இருந்து, 5 கி.மீ., துாரம் வரை, கிளாண்டர்ஸ் நோய் பாதிப்பு மண்டலம்; 5 கி.மீட்டரில் இருந்து 25 கி.மீ., வரை, விழிப்புணர்வு மண்டலம் என, அறிவித்துள்ளது.கிளாண்டர்ஸ் நோய், ஒரு தொற்று மற்றும் கடுமையான நோயாகும். இது பொதுவாக குதிரை, கழுதைகளுக்கு ஏற்படும். இந்த தொற்று ஏற்பட்டால், இவற்றின் சுவாசப்பையில் புண் ஏற்படும். நோய் தீவிரமடைந்தால், இறக்கும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ