உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டர் மீடியேட் தேர்வு முடிவு : தெலங்கானாவில் 7 மாணவர்கள் தற்கொலை

இண்டர் மீடியேட் தேர்வு முடிவு : தெலங்கானாவில் 7 மாணவர்கள் தற்கொலை

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இண்டர் மீடியேட் தேர்வு முடிவுகள் வெளியான 48 மணி நேரத்தில் 2 மாணவிகள் உட்பட 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.தெலங்கானா மாநிலத்தில் இண்டர் மீடியேட் தேர்வு ( பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ) க்கான முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளி்யிடப்பட்டன. இதில் தோல்வி அடைந்த மாணவர்கள் 7 பேர் வரையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 2 பேர் மாணவிகளாவர். ஹைதராபாத், கம்மம், மஹபூபாபாத் மற்றும் கொல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் தூக்கில் தொங்குதல், கிணற்றில் குதித்து, குளத்தில் மூழ்குதல் போன்றவற்றின் மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்தாண்டு துவக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் 9.8 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி உள்ளனர் இவர்களில் 61.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் ஆண்டில் தேர்ச்சி சதவீதம் 69.46 சதவீதமாகும்.கடந்த 2019 ம் ஆண்டில் இதே போன்று இண்டர் மீடியட் தேர்வில் தோல்வி அடைந்தது தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆகும்.தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் 2022ம் ஆண்டின் படி 28 மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ம.பி., மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களையும் தெலங்கானா மாநிலம் 11 வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

kamikki
ஏப் 27, 2024 22:48

நாடும், மாணவர்களின் எதிர்காலமும், நாசமாகிக் கொண்டிருக்கிறது தவறான வழிகாட்டுதல்கள், அந்த வயதில் எது முக்கியம் என்ற அறியாமை, சினிமா, எல்லாம் கொடுமை


manokaransubbia coimbatore
ஏப் 27, 2024 22:17

ஐயகோ அந்த தேர்வுகளை நடத்தாமல் ஒழித்து விடுங்கள் இவ்வளவு மாணவர்கள் சாக காரணமான எல்லா தேர்வுகளையும் ஒழித்து விட்டு எல்லாரும் பாஸ் என்று அறிவிப்பர்களாக இப்படிக்கு திராவிட மாடல் குஞ்சுகள்


ஆரூர் ரங்
ஏப் 27, 2024 21:51

பொய்.. உலகெங்கும் நீட் தேர்வு பயததால் மட்டுமே தற்கொலை நடக்கிறது.


A. Narayanan
ஏப் 27, 2024 21:40

இன்டெர்மீடியட் தேர்வுகளை ரத்து பண்ணிவிடலாம் எங்க ஊர்ல நாங்க நீட்தேரவை இப்படித்தான் ரத்து செய்ய கேட்கிறோம்


Ramesh Sargam
ஏப் 27, 2024 21:38

படிக்கும் காலத்தில் படிக்காமல், சினிமா பார்ப்பது, எதற்கும் உதவாத டிவி சீரியல்கள் பார்ப்பது, வலைத்தளங்களில் நேரம் கழிப்பது என்று இருந்துவிட்டு, தேர்வுக்கு முன்பு படித்தால் எப்படி பாஸ் ஆகமுடியும்? இப்படி தற்கொலை செய்துகொள்வது எப்படி சரியாகும்? முதலில் பிள்ளைகளின் பெற்றோர்கள் மாறவேண்டும் அவர்கள் சினிமா, டிவி சீரியல்களை பாக்காமல் இருக்கவேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை